Published:Updated:

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

எப்போதும் இப்படி பாசிட்டிவ் எனர்ஜியோடு பேசுகிறவர் லக்‌ஷ்மணன் சிதம்பரம்.

பிரீமியம் ஸ்டோரி
ரு நல்ல வேலைக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது, அதாவது Job Ready ஆவதற்கு அசகாய சாதனைகளை எல்லாம் செய்ய வேண்டியதில்லை. சரியான துறையில், சரியான கம்பெனியில், சரியான வேலைக்கு முயற்சி செய்தால்... `டாப்பில் வர... ஆடி முடிஞ்சி ஆவணி வரும்வரை' காத்திருக்க வேண்டியதில்லை. கிக்-ஸ்டார்ட் பண்ணாமல், செல்ஃப்-ஸ்டார்ட்டிலேயே நம் கரியரை டாப்-கியரில் எகிற வைக்கலாம்.
நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

இதில் நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம்... 'எந்தத் துறையில் எந்த மாதிரி வேலைகளுக்குத் தேவைகள் இருக்கின்றன? இந்த வேலையைச் செய்வதற்கு என்ன மாதிரி 'ஸ்கில்-செட்ஸ்' எதிர்பார்க்கிறார்கள்?' என்ற இரண்டே இரண்டு தகவல்கள்தான்.

கார் டிசைனிங் பற்றி பல பயிலரங்குகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். சமீபத்தில் டூ வீலர் டிசைனிங் பற்றி டிவிஎஸ் மோட்டார்ஸுடன் இணைந்து ஒரு பயிலரங்கத்தை மோட்டார் விகடன் நடத்தியது. இதையடுத்து மோட்டார் ஸ்போர்ட்ஸ், அதையடுத்து தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் என்ன மாதிரியான வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்பதைப் பற்றி விவரமாக எடுத்துச் சொல்ல, மோட்டார் விகடன் மேலும் இரண்டு பயிலரங்கங்களை நடத்துகிறது.

ரேஸில் ஓர் அணியின் சார்பாகக் கலந்துகொள்வது ஒருவர்தான் என்றாலும், டீம் மேனேஜர் தொடங்கி டயர் ஸ்பெஷலிஸ்ட், ஜெனரல் ஸ்பெஷலிஸ்ட், ட்யூனர், மெக்கானிக், பிட் க்ரூ, மார்ஷல்ஸ் என்று அவருக்குப் பின்னால் ஒரு பெரும் படையே சுறுசுறுப்பாய் இயங்குவதை தொலைக்காட்சியிலோ அல்லது ரேஸ் மைதானத்திலோ பார்த்திருப்போம்.

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

நம் நாட்டைப் பொறுத்தவரை இவற்றில் பல வேலைகள் பகுதிநேர வேலைகள்தான். ஆனால் மிகுந்த மனநிறைவைக் கொடுப்பவை. இத்துறையில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றியெல்லாம் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸைச் சேர்ந்த தருண், அக்டோபர் 10-ம் தேதி நடக்கவிருக்கும் பயிலரங்கில் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். வேகம்தான் உங்கள் வேதம் என்றால், நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய பயிலரங்கம் இது.

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

Job opportunities in Motor Sports அக்டோபர் 10, 2020 பதிவு செய்ய: https://bit.ly/3c8eaK5

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ங்கள் காரை இன்டெலிஜென்ட் கார் என்று பல கம்பெனிகள் விளம்பரப்படுத்துகிறார்கள். இதன் பின்னால் மெஷின் லேர்னிங், டேட்டா அனலிடிக்ஸ், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இதுதான் உங்கள் ஏரியா என்றால் அக்டோபர் 11-ம் தேதி நடக்கவிருக்கும் இந்தப் பயிலரங்கம் உங்களுக்குத்தான்.
நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

எப்போதும் இப்படி பாசிட்டிவ் எனர்ஜியோடு பேசுகிறவர் லக்‌ஷ்மணன் சிதம்பரம். டெக் மஹிந்திராவின் அமெரிக்கச் செயல்பாடுகளை முன்னின்று நடத்தும் ‘என்டர்பிரைஸ் பிசினஸ்’ பிரிவின் தலைவரான இவரது பேச்சே பல மேஜிக்குகளை நமக்குள் நிகழ்த்தும்.

லக்‌ஷ்மணன் சிதம்பரம், ஸ்ரீராம் கிருஷ்ணன், ராஜேஷ் தூடு
லக்‌ஷ்மணன் சிதம்பரம், ஸ்ரீராம் கிருஷ்ணன், ராஜேஷ் தூடு

திறமையான இளைஞர்களை வளர்த்தெடுப்பதையே தன் உப தொழிலாகச் செய்துவருபவர் ஸ்ரீராம் கிருஷ்ணன். ‘ஆர்ட்டிபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ்’ ஆகியவற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருப்பவர். இந்த ஏரியாக்களில் கில்லியாக ஒருவர் என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்லவிருக்கிறார்.

உலகத்திலேயே மிகப் பெரிய பிளாக் செயின் நெட்வொர்க்கைக் கட்டமைத்தவர் ராஜேஷ் தூடு. சைபர் செக்யூரிட்டி என்பது இவரது இரண்டாவது கோட்டை. ‘புதிதாக வருகிறவர்களைப் புண்படுத்தாதே, பண்படுத்து’ என்பதைத் தன் டேக் லைனாக வைத்திருக்கும் இவர் திறமை யான இளைஞர்களை ஊக்குவிப்பதில் உற்சாகம் கொள்பவர்.

இவரும் உங்களோடு உரையாடவிருக்கிறார்.

All the Best!

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

Job opportunities in IT Field. அக்டோபர் 11,2020 https://bit.ly/33FkmWf

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு