Published:Updated:

உங்களுக்கு அபூர்வ சகோதரர்கள் படம் அவ்வளவு பிடிக்குமா? - #OneYearofAPPAPPO

அபூர்வ சகோதரர்கள்

ஓராண்டை நிறைவு செய்திருக்கும் APPAPPOவின் ஹேப்பி ஷேரிங்ஸ்.. லேர்னிங்ஸ்!

உங்களுக்கு அபூர்வ சகோதரர்கள் படம் அவ்வளவு பிடிக்குமா? - #OneYearofAPPAPPO

ஓராண்டை நிறைவு செய்திருக்கும் APPAPPOவின் ஹேப்பி ஷேரிங்ஸ்.. லேர்னிங்ஸ்!

Published:Updated:
அபூர்வ சகோதரர்கள்

தமிழ் மக்களுக்காகவும், படைப்பாளிகளுக்காவும், ஊடக உலகிற்கும் விகடன் குழுமம் உருவாக்கிய APPAPPO ஆப் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.

ஏன் APPAPPO?

டிஜிட்டல் உலகில் தகவல்களுக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கும் நிலையில், 'இது படிக்க நல்லா இருக்கும்' என்று நம்பி தலைப்பை க்ளிக் செய்யும் வாசகர்களின் நேரத்தையும், பணத்தையும் மதிப்புள்ளதாக ஆக்கவேண்டும் என்று APPAPPO உருவாக்கப்பட்டது.

விகடனின் எவர்கிரீன் கட்டுரைகள் மட்டுமில்லாமல் நல்ல கட்டுரைகளை படைக்கக்கூடிய திறமை படைத்தவர்கள், சிறந்த கட்டுரைகளை வழங்கும் ஊடகங்கள் என சிறந்த படைப்புகளை மட்டும் கொண்டிருக்கும் தளமாக APPAPPO உருவானது.

APPAPPOல என்ன இருக்கு?

1926ல் இருந்து விகடனில் வெளியான சிறந்த கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள், தொடர்கள் போன்றவற்றை படிக்கலாம். புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை கல்வி இதழ், அந்திமழை இதழ், இந்தியாஸ்பெண்ட் தளம் ஆகியவற்றின் சிறந்த கட்டுரைகளை APPAPPOவிலேயே படிக்கலாம்.

கருந்தேள் ராஜேஷ், பேடி நாகராஜ், கார்த்திகேயன் ஃபாஸ்டுரா, சரவணன் சந்திரன், கவிஞர் இசை, ஜி.ஆர். சுரேந்தர்நாத் ஆகியோர் APPAPPOவில் பிரத்யேகமாக படைப்பாளிகளாக இணைந்துள்ளனர்.

மேலும் பல முக்கிய ஊடக நிறுவனங்களும், படைப்பாளிகளும் APPAPPOவில் இணைய இருக்கிறார்கள்!

சரி... APPAPPOல எனக்கு என்ன இருக்கு?

இப்பதான் மெயின் பாயின்ட்டுக்கு வர்றோம்! APPAPPOல எல்லாமே personalized. உங்களுக்குப் பிடித்த கட்டுரைகளை மட்டுமே காட்டும் பிரத்யேக ஹோம்பேஜ், உங்களுக்காகவே அனுப்பப்படும் கட்டுரைகள்னு அசத்தலா இருக்கும். உங்களுக்குப் பிடித்த கட்டுரைகளை மட்டும் வாங்கிக்கொள்ளலாம்!

APPAPPOல தினமும் பதிவாகும் 12 கட்டுரைகளும், இன்று வாசகர்களுக்கு தேவையான கட்டுரைதானா என பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்பட்டவையே!

APPAPPO review
APPAPPO review

APPAPPOவில் உங்களின் கட்டுரைத் தேர்வுகளைப் பொறுத்து உங்களுக்காக அனுப்பப்படும் கட்டுரைகளின் தரமும் உயர்ந்து கொண்டே வரும். அதிகம் படிங்க.. அதிகம் பிடிக்கும்!

நல்லா இருக்கே.. ஒருவருஷத்துல என்ன கத்துக்கிட்டீங்க?

தமிழ் வாசகர்கள் எப்போதுமே டெக்னிக்கலாகவும், ரசனையும் வேற லெவல் என்பதை APPAPPOவில் கண்டு கொண்டோம். எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், அதைப் பற்றி ஆழமாக, நல்ல நடை கொண்ட கட்டுரைகளே APPAPPOவில் அதிக வரவேற்பைப் பெற்றன.

உதாரணத்துக்கு ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, 'ஃபேக்டரி திறக்கும்போதே போராடாம இப்ப ஏன் வந்து போராடறீங்க? கருணாநிதிதானே அடிக்கல் நாட்டினார்'ன்னு எல்லாம் வாட்ஸ்-அப்ல ஃபார்வர்டுகள் வந்தது ஞாபகம் இருக்கா?

சரி, அப்ப யாருமே போராடலயான்னு எங்களுக்கே ஒரு சந்தேகம் வர, விகடன் லைப்ரரியைப் புரட்டினோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே அங்கு போராட்டங்கள் நடந்ததை படங்களுடன் ஜூனியர் விகடன் கவர் செய்திருந்தது. அதை அப்படியே APPAPPOவில் பதிவு செய்ய, வாசகர்கள் வழக்கத்தைவிட அதைப் படித்துப் பகிர ஆர்வம் காட்டினார்கள். உடனே அன்றில் இருந்து இன்றுவரை ஸ்டெர்லைட் சிக்கல் பற்றிய அனைத்து முக்கிய கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட வாசகர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் பொறுமையாக வாசிப்பதைக் கண்டோம்.

இதே போலத்தான் ரஜினியின் 90s அரசியல் அதிரடி பன்ச்கள், கமல்ஹாசனின் டெரர் பேட்டிகள், ஆட்டோ சங்கர் க்ரைம் கவரேஜ்னு எவர்கிரீன் விஷயங்களை APPAPPOல #OnlyInAPPAPPOவா கொண்டு வந்தோம்.

Sterlite Articles
Sterlite Articles

2019 APPAPPOல என்ன ஹிட்டாச்சு?

2019ம் ஆண்டு APPAPPOலயே மிக அதிகமாக படிக்கப்பட்டது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் விகடன் விமர்சனம். தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படங்களுடைய விகடன் மார்க் & விமர்சனம் எல்லாமே APPAPPOல இருக்கு.

இளையராஜாவுடனான பிரிவைப் பற்றி வைரமுத்து 1988லயே கொடுத்த ஒரு மினி பேட்டியும் செம்ம ரீச்!

அடுத்த படியாக கமல்ஹாசன் 1990ல் கொடுத்த ஆறு மணிநேரப் பேட்டி, கா. பாலமுருகனின் 'நெடுஞ்சாலை வாழ்க்கை', அசுரன் படம் பற்றி கருந்தேள் ராஜேஷ் எழுதிய கட்டுரைகள் நிறைய வாசகர்களால் படிக்கப்பட்டிருந்தன.

சினிமாவைத் தாண்டி விவசாயம், சுய முன்னேற்றம், சிறுகதைகள், வேலைவாய்ப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்தது.

2020க்கு APPAPPO பிளான் என்ன?

உங்க எல்லாருக்கும் பிடித்த பல படைப்பாளிகளும், ஊடகங்களும் நிச்சயம் APPAPPOவில் வரப்போகிறார்கள்.

APPAPPO ஆப்பிலும் ஹேப்பி ஹவர், Podcastனு நிறைய புதிய வசதிகள் வரப்போகின்றன. வாசகர்கள் அதிகம் கேட்ட கமென்ட்ஸ் வசதியும் ஆன் தி வே!

இந்த வாரம் (ஜனவரி 27 - ஃபிப்ரவரி 2) APPAPPOல ஒரு புது வசதி வரப்போகுது! தமிழ் ஆப்ஸ்லயே APPAPPOல மட்டும்தான் இந்த வசதி இருக்கும்!

உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நம்புறோம்!

விகடன்லயே சொல்றோம்... ரைட்டா?

இப்போ APPAPPO இன்ஸ்டால் பண்ண இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க -> http://bit.ly/1YrofAPPAPPO

APPAPPO review
APPAPPO review