Published:Updated:

``ஹாய் ஒன் ப்ளஸ், ஆப்பிள்... நாங்க வந்தாச்சு!"- சாம்சங் நோட் 10 மொபைல்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் 10+ ஆகிய இரண்டு மொபைல்கள்தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டுக்கும் ரேம், பேட்டரி, மெமரி மற்றும் ஸ்க்ரீன் அளவு என எல்லாமே மாறுபடும்.

சாம்சங் நோட் 10
சாம்சங் நோட் 10

மொபைல் சந்தை சூடு பிடித்திருக்கிறது. ஒன்ப்ளஸ் 7 ப்ரோ விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் ஆப்பிளின் புதிய மொபைல்கள் வெளியாகிவிடும். இடையில், சாம்சங் நோட் சீரிஸ் மொபைல்களின் இரண்டு நேற்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் 10+ ஆகிய இரண்டு மொபைல்கள்தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டுக்கும் ரேம், பேட்டரி, மெமரி மற்றும் ஸ்க்ரீன் அளவு என எல்லாமே மாறுபடும்.

சாம்சங் நோட் 10 ஸ்பெக்ஸ்:

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

6.3 இன்ச் திரை

3,500mAh பேட்டரி

மைக்ரோ எஸ் டி ஸ்லாட் கிடையாது

விலை $949 (INR 67,500)

சாம்சங் நோட் 10
சாம்சங் நோட் 10
சாம்சங்

சாம்சங் நோட் 10+ ஸ்பெக்ஸ்:

12 ஜிபி ரேம்

256 மற்றும் 512 ஜிபி மெமரி

6.3 இன்ச் திரை

4300mAh பேட்டரி

மைக்ரோ எஸ் டி ஸ்லாட் உண்டு

விலை: $1099 முதல்

இரண்டு மாடல்களும் ஆரா க்ளோ, ஆரா வொயிட் மற்றும் ஆரா பிளாக் நிறங்களில் கிடைக்கும். நோட் 10+ மட்டும் நீல நிறத்திலும் கிடைக்கும். அமெரிக்காவில், முன்பதிவு தொடங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 23 முதல் ஷிப்மென்ட் தொடங்கும். அடுத்த மாதம் இந்தியாவுக்கு இந்த மாடல் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.