Published:Updated:

ஸ்பேர் பார்ட்ஸும் டோர் டெலிவரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்பேர் பார்ட்ஸும் டோர் டெலிவரி
ஸ்பேர் பார்ட்ஸும் டோர் டெலிவரி

மொபைல் ஆப்

பிரீமியம் ஸ்டோரி
து கொரோனா காலம். இந்த வாக்கியம் “இனி கொரோனா காலம்” என்றும் மாறக்கூடும். உலகம் முழுவதுமே கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

சமூக இடைவெளி என்பது நம் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. இந்த மாற்றத்தால் பல வணிகத்துறைகளும் மாறி வருகின்றன. ஆட்டோமொபைல் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல!

ஒரு கார் பழுதாகிவிட்டால் அதன் ஓனர் என்ன செய்வார்? வாரன்ட்டியில் இருக்கும் காராக இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட பணிமனைக்குக் காரைக் கொண்டு செல்வார். பழைய கார் என்றால், அருகிலிருக்கும் மெக்கானிக் ஷெட்டில் வண்டியை சர்வீஸுக்கு விடுவார். அவர்கள் வண்டியை செக் செய்து, தேவைப்படும் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க அலையோ அலை என்று அலைவார்கள். இந்தக் கொரோனா காலத்தில் இது மேலும் ஆபத்து. இதுவே தேவைப்படும் ஸ்பேர்ஸை ஸ்விகியில் பிரியாணி ஆர்டர் செய்வதைப்போல சுலபமாக வாங்க முடிந்தால்?

உணவுக்கு ஸ்விகி ஆப்போல ஆட்டோ ஸ்பேர்ஸுக்கு ஒரு ஆப்பை அறிமுகப்படுத்தி யிருக்கிறது கூவர்ஸ் (Koovers) என்கிற கம்பெனி. இவர்களின் ‘ஆப்’பில் பல பிராண்டு கார்களின் 3800 ஸ்பேர் பார்ட்ஸ் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றின் விலை என்ன, அந்தப் பாகம் ஸ்டாக் இருக்கிறதா, எப்போது கிடைக்கும் என எல்லா தகவல்களும் அதிலிருக்கின்றன. இதில் எந்த ஸ்பேர் பார்ட்ஸ் வேண்டுமோ அதைத் தேர்வு செய்து ஆர்டர் செய்தால்... அது வொர்க்‌ஷாப்பைத் தேடி வந்துவிடும்.

ஸ்பேர் பார்ட்ஸும் டோர் டெலிவரி
ஸ்பேர் பார்ட்ஸும் டோர் டெலிவரி

வொர்க்‌ஷாப் ஓனர்களுக்கு மட்டுமல்ல, கார் ஓனர்களுக்கும் இதில் பல அம்சங்கள் உண்டு. அருகில் எங்கே வொர்க்‌ஷாப் இருக்கிறது என்பது முதற்கொண்டு பல விஷயங்களை இதில் ட்ராக் செய்ய முடியும்.

இதைப் போல பல `ஆப்’ஸ் வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு