Published:Updated:

என்ன செல்போன் இப்போது வாங்கலாம்? - புதிய மொபைல்கள் பற்றிய ரிவ்யூ

மொபைல்கள்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல்கள்

10,000 ரூபாயில் மொபைல் வாங்க நினைப்பவர்கள் ரெட்மி வெளியிட்டுள்ள ரெட்மி 9 ப்ரைம் போனைப் பரிசீலிக்கலாம்!

என்ன செல்போன் இப்போது வாங்கலாம்? - புதிய மொபைல்கள் பற்றிய ரிவ்யூ

10,000 ரூபாயில் மொபைல் வாங்க நினைப்பவர்கள் ரெட்மி வெளியிட்டுள்ள ரெட்மி 9 ப்ரைம் போனைப் பரிசீலிக்கலாம்!

Published:Updated:
மொபைல்கள்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல்கள்
ண்டின் கடைசி மூன்று மாதங்கள் மொபைல் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஏகப்பட்ட புதிய மாடல்கள் விற்பனைக்கு வரும். அதுவும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் ஆண்டு விற்பனையும் இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் என்பதால், நிறைய தள்ளுபடி, கேஷ்பேக் என வாங்கிக் குவிக்க ஏதுவான சமயம் இது. இப்போது மொபைல் மார்க்கெட்டில் சக்கை போடுபோடும் மூன்று மொபைல்களின் ரிவ்யூ இதோ...

பட்ஜெட் செக்மென்ட் (ரூ.10,000-க்குள்)

ரெட்மி நோட்9 சீரிஸ் விலை ஜி.எஸ்.டி அதிகரித்ததால், கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அதனால் பட்ஜெட் மொபைல் காரர்கள் அந்தப் பக்கம் போவது குறைந்ததை ரெட்மி கண்டுபிடித்துவிட்டது. அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள அந்த நிறுவனம் புதிதாக வெளியிட்ட மாடல்தான் ரெட்மி 9 ப்ரைம்.

என்ன செல்போன் இப்போது வாங்கலாம்? - புதிய மொபைல்கள் பற்றிய ரிவ்யூ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

6.53 இன்ச் டிஸ்ப்ளே என்பதால், பார்க்கும்போது சின்ன மொபைலாகத் தெரியாது என்பது முதல் ப்ளஸ். ஆஸ்பெக்ட் ரேஷியோ, திரை துல்லியம் ஆகியவையும் விலைக்கேற்ற தரத்தில்தான் இருக்கின்றன. 2GHz octa-core MediaTek பிராசஸரும், 4ஜிபி ரேமும் தந்திருப்பதால், பெரிய அளவில் ஹேங்கிங் பிரச்னைகள் இருக்காது. ஆனால், ஆர்வலர்களுக்கு இது போதுமானதாகவும் இருக்காது.

பேட்டரி விஷயத்தில் சொல்லி அடித்திருக்கிறது ரெட்மி. பின்பக்கம் 4 கேமராவும் செல்ஃபி கேமராவும் வழக்கம் போலத்தான். 64 ஜிபிதான் இன்பில்ட் மெமரி என்றாலும்

512 ஜிபி வரை மெமரி கார்டு போட்டுக் கொள்ளலாம். இரண்டு சிம் ஸ்லாட்டுகளுமே நானோ சிம், 4ஜி. விலையை ஒப்பிடும்போது இதன் வசதிகள் எல்லாமே பாராட்டப்பட வேண்டியவைதான். இன்னொருமுறை பட்ஜெட் ஏரியா எங்களுடையதுதான் என நிரூபித்திருக்கிறது ரெட்மி. இந்த செல்போன்கள் குறித்த முக்கியமான குறிப்புகள் இனி...

 • விலை: 9,999 முதல்.

 • 13MP quad rear camera| 8 MP front camera.

 • (6.53-inch) FHD, 2340 x 1080 pixels resolution, 19.5:9 aspect ratio.

 • 4GB Ram | 64GB internal memory expandable up to 512GB.

 • Android v10.

 • 2.0 GHz Mediatek Helio G80 octa core processor.

 • 5020 mAh battery.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிட் செக்மென்ட் (15,000 - 30,000 ரூபாய்)

இந்த ஏரியா முன்பு சாம்சங் வசம் இருந்தது. ரெட்மி கொஞ்சம், ரியல்மி கொஞ்சம் விவோவும் ஓப்போவும் மிச்சம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக சாம்சங்கைக் காலி செய்யத் தொடங்கின. அப்போது சாம்சங்கைக் காப்பாற்ற வந்ததுதான் கேலக்ஸி எம் (Galaxy M) சீரிஸ் மாடல்கள். அதில் புதிய அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம் 51 மாடல்தான் (Samsung Galaxy M51) இப்போதைய ஹாட் ஹிட்.

என்ன செல்போன் இப்போது வாங்கலாம்? - புதிய மொபைல்கள் பற்றிய ரிவ்யூ

ரிவ்யூவை ஃபிங்கர் பிரின்ட் மற்றும் பேட்டரியிலிருந்தே தொடங்க வேண்டும். சைடிலிருக்கும் பவர் பட்டனில் பிங்கர் பிரின்ட் சென்சாரை வைத்திருக்கிறார்கள். அதனால், எந்தக் கையில் மொபைல் எடுத்தாலும் ஒரே கையில் எளிதாக மொபைலை அன்லாக் செய்ய முடியும். 7000 mAh பேட்டரி என்றாலும் அதனால் எடை கூடியதாகத் தெரியவில்லை. அழகாக டிசைன் செய்திருக்கிறது சாம்சங். இந்த மான்ஸ்டர் பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரும் தந்திருக்கிறார்கள். 6.7 அகலத்திரை, குறிப்பாக சாம்சங் ஸ்பெஷல் AMOLED டிஸ்ப்ளே டாப் கிளாஸ். உடையுமென்ற கவலை கொஞ்சம் வேண்டாம்; கொரில்லா கிளாஸ்3 பாதுகாப்பு வசதி உண்டு என்பதால். 6 ஜிபி மற்றும் 8 ஜிபி என்ற இரண்டு வேரியன்ட்டுகள் உண்டென்றாலும் இரண்டிலும் 128 ஜிபி மெமரிதான். தேவை என்றால் மெமரி கார்டு போட்டுக் கொள்ளலாம்.

 • விலை: 24,999 முதல்.

 • 64MP main camera + 12MP ultra wide camera + 5MP depth camera + 5MP macro camera and 32MP front camera.

 • 6.7-inch sAMOLED Plus display.

 • 8GB RAM, 128GB internal memory expandable up to 512GB.

 • Android v10.0

 • 2.2GHz+1.8GHz Qualcomm | SD730G octa core processor.

 • 7000mAH lithium-ion battery | 25W USB Type-C to C fast charger.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரீமியம் செக்மென்ட் (ரூ.30,000-க்கும் மேல்)

ஆப்பிளும் கூகுளும் பாக்ஸிங் நடத்தும் ஏரியா என்றாலும் இங்கே முடிசூடா மன்னன் ஒன் ப்ளஸ் தான். அதன் சமீபத்திய அறிமுகமான ஒன் ப்ளஸ் 8டி இந்த ஏரியாவில் நாம் பரிந்துரைக்கும் மாடல்.

‘கேமரா விஷயத்தில ஆப்பிள், கூகுள் பிக்ஸல் அளவு இல்லையேப்பா’ என்ற குற்றச்சாட்டை சீரியஸாக எடுத்துக்கொண்டு, அந்த ஏரியாவில் ஏகப்பட்ட முன்னேற்றங்களைச் செய்துள்ளது ஒன் ப்ளஸ்!

விலை அதிகம் என்றாலும் அந்த விலையை விட அதிகமான வசதிகளைத் தருவதுதான் ஒன் ப்ளஸ் ஸ்டைல். ‘ஆனா, கேமரா விஷயத்தில ஆப்பீள், கூகுள் பிக்ஸல் அளவு இல்லையேப்பா’ என்ற குற்றச்சாட்டை சீரியஸாக எடுத்துக் கொண்டு, அந்த ஏரியாவில் ஏகப்பட்ட முன்னேற்றங்களைச் செய்திருக்கிறது ஒன் ப்ளஸ். அதனால் 8டி மாடலின் ஸ்பெஷலே கேமராதான். 12ஜிபி ரேம், 4500 mAh பேட்டரி, க்விக் ஃபாஸ்ட் சார்ஜிங், 6.55 இன்ச் திரை, 5ஜி, ஆண்ட்ராய்டு 11 என எதைத் தொட்டாலும் சிக்ஸர்தான். மொபைல் வாங்க 45,000 செலவு செய்யத் தயார் என்றால், இந்த போன் பெஸ்ட்.

 • விலை: 42,999 முதல்.

 • 48 MP, 16 MP Ultra Wide Angle, 5 MP macro lens and 2 MP monochrome lens, Front Camera with 16 MP Sony IMX471 Sensor.

 • 6.55 inch120 Hz Fluid AMOLED Display.

 • 2.86 GHz Qualcomm Snapdragon 865 Octa-core Processor.

 • Android 11 Operating system.

 • 8 GB RAM | 128 GB ROM.

 • 4500 mAH Lithium-ion battery with 65 W ‘Warp charge’.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism