Published:Updated:

இது டெக்னாலஜி டிராவல்!

டெக்னாலஜி
பிரீமியம் ஸ்டோரி
டெக்னாலஜி

டெக்னாலஜி

இது டெக்னாலஜி டிராவல்!

டெக்னாலஜி

Published:Updated:
டெக்னாலஜி
பிரீமியம் ஸ்டோரி
டெக்னாலஜி
டெஉலகம் சுவாரஸ்ய மானது. ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை உலகுக்கு ஏதேனும் ஒரு ‘போதை'யை அது தந்துவிடும். மனித இனமும் அந்த ஒன்றிலே சுழலத் தொடங்கும்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அது மெயில் மற்றும் சாட் ஆக இருந்தது. பிரவுசிங் சென்டர் தேடித் தேடி இளைஞர் கூட்டம் அலைந்தது. மெயில் வந்திருக்கிறதா எனத் தினம் நான்கு முறைக்கு மேல் பார்த்தாலே ‘நீ இணைய அடிமை’ என்றெல்லாம் மனதை நோகடித்தார்கள் மனநல ஆர்வலர்கள். ஆனால், உலகம் கேட்கவில்லை. சாட் செய்து காலம் கழித்தார்கள். மெயில் மூலம் காதல் வளர்த்தார்கள்.

இது டெக்னாலஜி டிராவல்!

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இணையமும் டெக்னாலஜியும் தந்த போதை பிளாகிங் (Blogging). ஊருக்கு 10 பேர் வலைப்பூ எழுதத் தொடங்கினார்கள். புனைவுக்கதைகளையும் பத்தி எழுத்தையும் தாண்டி சொந்தக் கதைகளை எழுதிக் குவித்தார்கள். எவ்வளவு எழுதினாலும் அதை உலகம் படித்து தீர்த்தது. கூடவே, ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பிளாகர்கள் வருமானமும் பார்த்தார்கள். முதல் முறையாக சோஷியல் இன்ஃப்ளூயன்சர்கள் உருவானார்கள்.

ஸ்டார்களை வைத்து மட்டுமே விளம்பரம் செய்தவர்கள், சாமான்யர்களிடம் ‘எங்க பிராண்டை யூஸ் பண்ணிப் பாத்துட்டு உங்க பிளாகுல எழுத முடியுமா?' என்றார்கள்.

பிளாக் மாஸ் ஹிட் ஆகிக்கொண்டிருந்த நேரம் கே.ஜி.எஃப் ராக்கி பாய்போல தன் கால் தடத்தைப் பதித்தன சமூக வலைதளங்கள். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் செய்த அலப்பறையில் பிளாகர்களே தங்கள் வலைப்பூவைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள்; அது வெளவால்கள் பறக்கும் குடோன் போல ஆனது. இந்தியாவின் மக்கள் தொகையைவிட அதிக பேர் ஃபேஸ்புக்கில் வாழ்ந்தார்கள். புதிதாகத் தொழில் தொடங்கிய பிராண்டுகளும் ஸ்டார்ட்அப்களும் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பிக்கும் முன்பு ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுன்ட் ஆரம்பித்தார்கள். காரணம், அங்குதான் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். பிளாகும் மெயிலும் தந்திராத ஒன்றை சோஷியல் மீடியா தந்தது. அதுதான் ‘கனெக்ட்’ என்ற மேஜிக். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இன்னொருவருடன் தொடர்பு ஏற்படுத்தும் வேலை எளிமையானது. நினைத்தே பார்க்க முடியாத ‘அன்டா கா கசங்களை’ சமூக வலைதளங்கள் ஜஸ்ட் லைட் தட் செய்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘இனி ஃபேஸ்புக்கை வெல்ல ஒருவன் பிறந்து வர வேண்டும்’ என நினைத்தபோதுதான் ஏற்கெனவே பிறந்திருந்த வீடியோ தளங்கள் விஸ்வரூபமெடுத்தன. யூடியூபில் தொடங்கி டிக்டாக் வரை சொல்லி அடித்த வீடியோ கில்லிகள் நிறைய. யூடியூப் சினிமாக்காரர்கள் பலருக்கே வாழ்க்கை தந்தது என்றால், டிக்டாக் சாமான்யர்களை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. பீச், தியேட்டர், பஸ் என எங்கு பார்த்தாலும் மொபைலை வைத்து டிக்டாக் வீடியோ ரெக்கார்டு செய்துகொண்டிருந்தது உலகம். எழுதத் தெரியாதவர்கள் பிளாக் மற்றும் சமூக வலைதளங்களில் கொஞ்சம் பின் தள்ளியிருந்தார்கள். ஆனால், வீடியோ உலகம் அவர்களை அரவணைத்துக்கொண்டது. எகிறி அடித்தார்கள்.

இது டெக்னாலஜி டிராவல்!

டிக் டாக் தடை, கொரோனா ஊரடங்கு என இப்போது பிரச்னைகள் வந்துவிட்டன. அதேநேரம் டெக்னாலஜியின் அடுத்த செல்லக் குழந்தை ஏதோ ஒன்றை உலகம் தூக்கி சுமக்க வேண்டிய காலமும் வந்துவிட்டது. ஹிட் அடிக்கப்போவது எது எனக் காத்திருந்தபோது படு வேகமாக சதமடித்துவிட்டு பேட்டைத் தூக்கிக் காட்டும் கோலியாக எழுந்து நின்றது ஓடிடி.

சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி யிருந்தாலும் கடந்த ஓராண்டில் ஓடிடி அடைந்த வளர்ச்சி மிகப்பெரியது. ‘இனி தியேட்டர் இருக்குமா?’ என்ற சந்தேகம் லேசாக எழுந்தவுடனே `நான் இருக்கேன்ல' எனத் தோளில் ஆறுதலாகக் கை போட்டது ஓடிடி.

அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் என கிரிக்கெட் முதல் பிக் பாஸ் வரை அனைத்தையும் ஓடிடியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் தீபாவளிக்கு நமக்கு ஓடிடியில்தான் புது ரிலீஸ் எல்லாம். அடுத்து சூர்யா வரப்போகிறார். விஜய்யின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டிருக் கிறார்கள்.

யார் வந்தாலும் வராவிட்டாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஓடிடிகளுக்குத்தான் நம் 24 மணி நேரத்தில் கணிசமான அளவு போகப் போகிறது என்கின்றன ஆய்வுகள். `நெட் ஃப்ளிக்ஸுக்குப் போட்டி, மக்களின் தூங்கும் நேரம் மட்டும்தான். அது இல்லையென்றால் இன்னும் பல ஆயிரம் கோடிகளை நெட் ஃப்ளிக்ஸ் சம்பாதிக்கும்’ என்கிறார் அதன் நிறுவனர்.

அடுத்த யார்க்கரை தொழில்நுட்பம் நம் மீது எறியும்வரை ஓடிடிக்கள்தான் நம் பொழுது போக்கு சூப்பர் ஸ்டார்.