Published:Updated:

மோடி, விஜய், கோலி, பிகில் - ட்விட்டர் இந்தியாவின் டாப் 10! #ThisHappened2019

ட்விட்டர் டாப் 10
ட்விட்டர் டாப் 10

அதிகம் ட்வீட் செய்யப்பட்டிருக்கும் ஹேஷ்டேக் பட்டியலில், முதல் 10 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியப் படம்...

ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில், அந்த ஆண்டில் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்டவை குறித்து பட்டியல் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது, ட்விட்டர் நிறுவனம். அதேபோல, இந்திய அளவில் 2019-ம் ஆண்டு, ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஹேஷ்டேக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் பற்றிய ரிப்போர்ட்டை #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கோடு வெளியிட்டுள்ளது. அந்த ரிப்போர்ட்டில், பிரிவுகள் வாரியாக இடம்பெற்ற பட்டியல்...

ஹேஷ்டேக்

இந்திய அளவில், இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது, #Loksabhaelections2019 என்ற ஹேஷ்டேக். இரண்டாவது இடத்தில் #chandrayaan2 ஹேஷ்டேக்கும் 3-வது இடத்தில் #cwc19 ஹேஷ்டேக்கும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தீபாவளியையொட்டி வெளியான 'பிகில்' திரைப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட #Bigil என்ற ஹேஷ்டேக், 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Top 10 hashtags
Top 10 hashtags
Twitter India
இந்திய அளவில், அதிகம் ட்வீட் செய்யப்பட்டிருக்கும் ஹேஷ்டேக் பட்டியலில், முதல் 10 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியப் படம் 'பிகில்' மட்டுமே.

அரசியல்

அரசியல் பிரிவில், ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 ஆண்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் தற்போது எம்.பி பதவியில் இருப்பதால், இந்தப் பட்டியலில் 9-வது இடத்தில் அவரது ட்விட்டர் கணக்கு இடம்பெற்றுள்ளது.

Top 10 male politics
Top 10 male politics
Twitter india

அரசியலில் அதிகம் பேசப்பட்ட பெண்கள் கணக்கில், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மற்றும் மறைந்த பா.ஜ.க தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

Top 10 female - politics
Top 10 female - politics
Twitter India
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பின்பு, பிரதமர் மோடி பதிவுசெய்த ட்வீட்தான் இந்திய அளவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டது.
ட்விட்டர் இந்தியா
பிரதமர் மோடியின் இந்த ட்வீட்டை 1,17,000 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.

பொழுதுபோக்கு

இந்திய அளவில் பொழுதுபோக்குப் பிரிவில், ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 ஆண்கள் கணக்கின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 'பிகில்' படக்குழுவினரான விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி ஆகியோரின் பெயர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. முதல் நான்கு இடங்களை... முறையே அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், சல்மான் கான், ஷாருக் கான் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் பிடித்துக்கொள்ள, 5-வது இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் விஜய். 6-வது இடத்தை ஏ.ஆர்.ரஹ்மானும், 10-வது இடத்தை அட்லியும் பிடித்துள்ளனர்.

entertainmet top 10 male
entertainmet top 10 male
Twitter India

பெண்கள் பட்டியலில் சோனாக்‌ஷி சின்கா, அனுஷ்கா ஷர்மா, லதா மங்கேஷ்கர் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடிக்க, பிகில் படத் தயாரிப்பாளரான அர்ச்சனா 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

entertainmet top 10 female
entertainmet top 10 female
Twitter India
நடிகர் விஜய் ட்விட்டரில் வெளியிட்ட பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ட்வீட்தான் இந்திய அளவில் பொழுதுபோக்குப் பிரிவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்.
ட்விட்டர் இந்தியா
நடிகர் விஜய்யின் இந்த ட்வீட்டை 1 லட்சம் பேருக்கு மேல் ரீ ட்வீட் செய்துள்ளனர்.

விளையாட்டு

விளையாட்டுக்கான ஆண்கள் பிரிவில், ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண்கள் பட்டியலில் முதல் 10 இடங்களையும் கிரிக்கெட் வீரர்களே பெற்றுள்ளனர். முறையே, முதல் மூன்று இடங்களை விராட் கோலி, தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோர் பெற்றுள்ளனர். தமிழில் அதிகம் ட்வீட் செய்து, தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஹர்பஜன்சிங், இந்தப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Top 10 sports male
Top 10 sports male
Twitter India

பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவில், பி.வி.சிந்து, ஹீமா தாஸ், சானியா மிர்சா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

Top 10 sports female
Top 10 sports female
Twitter India
"இப்படி ட்வீட் போட்டா 150% அதிக என்கேஜ்மென்ட் கிடைக்கும்!" - ட்விட்டர் சொல்லும் டேட்டா
விளையாட்டுப் பிரிவில், தோனியின் பிறந்தநாளன்று கோலி பதிவுசெய்த ட்வீட்தான் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்
ட்விட்டர் இந்தியா
கோலி, தோனியின் பிறந்தநாளன்று பதிவிட்ட இந்த ட்வீட்டை 45,500 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.

எமோஜி

இந்தியர்களால் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 எமோஜிகளின் பட்டியலையும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. டாப் 10 எமோஜிக்களின் பட்டியலைக் கீழே காணலாம்...

Top 10 Emojis
Top 10 Emojis
Twitter India

ட்விட்டர் இந்தியாவின் இந்த டாப் 10 பட்டியல் வெளியானவுடன், #Bigil என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு