கேமராவிற்கென பல அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்டு இன்றைய நாட்களில் மொபைல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.Vivo X80 அதில் இன்னும் ஒரு படி மேலே போய் திரைப்படங்களையே எடுக்கும் அளவுக்கு கேமராக்களின் மூலம் மிரட்டியிருக்கிறார்கள்.

இந்த மொபைல் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்வீகா மொபைல் ஷோரூமில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 'பாரதி கண்ணம்மா' புகழ் ரோஷினி ஹரிபிரியன் பங்கேற்றார். இவர்களைத் தொடர்ந்து, பூர்வீகாவின் தலைமை நிர்வாக அதிகாரி யுவராஜ்,பூர்விகாவின் மார்கெட் துறையின் பொது மேலாளர் சிவகுமார்,துனை பொது மேலாளர் கோபால கிருஷ்ணன்,வீவோ நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கார்த்திக்,அக்கவுண்ட்ஸ் துறையின் மேலாளர் பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று,இந்த நிகழ்வினை சிறப்பாக நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 'பாரதி கண்ணம்மா' புகழ் ரோஷினி ஹரிபிரியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்," நான் ஒரு மாடல் மற்றும் நடிகையாக இருப்பதால் தினமும் பல போட்டோக்களை எடுக்க வேண்டிய நிலை இருக்கும், அதற்கு ஒரு மொபைல் நிச்சயமாக தேவைப்படும், மேலும் போட்டோ எடுப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நான் ஒரு மொபைல் வாங்கினால் முதலில் கேமராவை தான் பரிசோதித்துப் பார்ப்பேன், இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் என்னை மிகவும் ஈர்த்தது இந்த மொபைலில் உள்ள சினிமாட்டோகிராபி மோட் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, ஒரு போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என்றால் போட்டோகிராபர்களை அழைத்து போட்டோக்களை எடுக்க வேண்டிய நிலை இருக்கும், இந்த மொபைலின் மூலம் சாமானியர்களும் எளிதாக போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்".
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஸ்பெக்ஸ் ~ VIVO X80
164.95×75.23×8.30mm
206 கிராம்
6.78" 120 HZ ரிஃபிரெஷ் ரேட்
MediaTek Dimensity 9000
80W Flash Charge
4500mAh
கேமரா
32 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா
50MP+12MP+12MP டிரிபிள் ரியர் கேமரா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விலை
8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னெல் மெமரி ~ ₹54,999
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டர்னெல் மெமரி ~ ₹59,999
நிறம்
அர்பன் ப்ளூ
காஸ்மிக் பிளாக்
இந்த வீவோ X80 சீரியஸில் X80, X80 ப்ரோ என்று இரண்டு வகைகள் உள்ளன. வீவோ X80 சீரியஸ்யினை பொறுத்தமட்டில் சினிமாட்டோகிராபி மோட் உடைய 50 மெகாபிக்சல் கேமரா தான் முக்கிய சிறப்பம்சமாக விளங்குகிறது. . 6.78" டிஸ்பிலே கொண்ட வீவோ X80 ப்ரோ, குவால்காம் SM8450 ஸ்னாப்டிராகன் பிராசஸரினை கொண்டுள்ளது,மேலும் இதில் வயர்லெஸ் சார்ஜிங்கும் முக்கியமான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.X80 மாடல் மீடியா டெக் டைமன்சிட்டி 9000 பிராசஸரினை கொண்டுள்ளது.X80 மாடல் 4500 Mah பேட்டரி அளவினை கொண்டுள்ளது.X80 ப்ரோ மாடல் 4700 Mah பேட்டரி அளவினை கொண்டுள்ளது.