Published:Updated:

Tamil News Today: சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து..! - 4 பேர் பலி

சிவகாசிப் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!
Live Update
சிவகாசிப் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

01-01-2022 நடந்த முக்கிய நிகழ்வுகள்..!

01 Jan 2022 10 AM

Tamil News Today: சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து..! - நான்கு பேர் பலி 

புத்தாண்டு தினத்தன்று சிவகாசியில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சிவகாசி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்திலிருக்கும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கும் நிலையில், ஆறு அறைகள் வெடிவிபத்தில் தரைமட்டமாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.