Published:Updated:

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்! #NowAtVikatan

கே.என்.லட்சுமணன்
கே.என்.லட்சுமணன்

1.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Jun 2020 10 PM

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்!

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. இரண்டு முறை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

01 Jun 2020 7 PM

தமிழகத்தில் 23,495 பேருக்குத் தொற்று உறுதி!

corona
corona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக இருக்கிறது.

சென்னையில் ஒரே நாளில் 964 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

01 Jun 2020 6 PM

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரணச் சலுகைகள்!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரணச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நரேந்திரசிங் தோமர், ``ரூ.50 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு சிறு, குறு தொழில்களுக்கான சலுகைகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளைபொருள்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவிகிதம் முதல் 83 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கான 20,000 கோடி ரூபாய் நிவாரணம் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைவர். சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் வழங்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’’ என்றனர்.

01 Jun 2020 11 AM

ஐ.சி.எம்.ஆர் ஆராய்ச்சியாளருக்குக் கொரோனா!

இரண்டு வாரங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து டெல்லி வந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவருக்குக் கொரோனா பாசிட்டிவ் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் டெல்லி ஐ.சி.எம்.ஆர் கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு சுத்திகரிப்புப் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19- தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

01 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 5,394 ஆக அதிகரித்துள்ளது.

01 Jun 2020 7 AM

அமலானது #Unlock1:

ஊரடங்கு
ஊரடங்கு
Representational Image

லாக் டெளன் 4.0 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று நாடு முழுவதும் #Unlock1 என்னும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன்மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் 60% பயணிகளுடன் இன்று காலை முதல் இயக்கப்படுகிறது. இதுவரை சுகாதாரப் பணியாளர்களுக்காக இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று முதல் மக்களுக்காக இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் சிறப்பு ரயில்களும் இன்று இயக்கப்பட உள்ளன.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. வீடியோ: என்.ஜி.மணிகண்டன்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்துகள் இயங்க துவங்கியது. வீடியோ: என்.ஜி.மணிகண்டன்

Posted by Vikatan EMagazine on Sunday, May 31, 2020
01 Jun 2020 7 AM

குறையாத கொரோனா தாக்கம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகில் பல நாடுகளில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,62,422 -ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,73,848-ஆக உள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,46,477ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,37,170ஆக உயர்ந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,06,195ஆக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு