Published:Updated:

கொரோனா: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து #NowAtVikatan

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

01-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

01 Jun 2021 8 PM

இன்றைய கொரோனா நிலவரம்!   

தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் 2,467 பேருக்கும், அதிகபட்சமாக கோவையில் 3,332 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 31,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

01 Jun 2021 8 PM

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகள் ரத்து

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தகுந்த மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து விளக்கம் ஏதும் கொடுக்கப்படவில்லை.

01 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து 5-வது நாளாக இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,81,75,044 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,795. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,31,895 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,59,47,629 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 18,95,520 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,55,287 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 21,60,46,638 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு