Published:Updated:

Corona Live Updates: `3,882 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!’ - தமிழகத்தில் 94,049 ஆன மொத்த எண்ணிக்கை

கொரோனா
கொரோனா

1.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

01 Jul 2020 6 PM

தமிழகத்தில் 94,049 ஆன மொத்த எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

01 Jul 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலரவம்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,66,840-லிருந்து 5,85,493 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 24 மணி நேரத்தில் 18,653 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 507 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,893-லிருந்து 17,400 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,47,979 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,20,114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு