Published:Updated:

Corona Live Updates: `தமிழகத்தில் 2.5 லட்சம்; சென்னையில் 1 லட்சம்’ - கொரோனா நிலவரம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

1.8.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Aug 2020 6 PM

தமிழகத்தில் 5,879 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

Corona Live Updates: `தமிழகத்தில் 2.5 லட்சம்; சென்னையில் 1 லட்சம்’ - கொரோனா நிலவரம்

சென்னையில் மேலும் 1,013 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,877ஆக அதிகரித்துள்ளது.

01 Aug 2020 9 AM

இந்தியாவில் 17 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,94,374 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,93,58,659 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 5,25,689 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு