Published:Updated:

`ஒரே நாளில் 5,928 பேருக்கு தொற்று; 4,33,969 -ஆக அதிகரித்த மொத்த பாதிப்பு! - தமிழகத்தில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Pixabay )

01-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

01 Sep 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,928 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,969-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 -ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 7,418ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து ஒரே நாளில் 6,031 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 3,74,172 பேர் குணமடைந்துள்ளனர்.

`ஒரே நாளில் 5,928 பேருக்கு தொற்று; 4,33,969 -ஆக அதிகரித்த மொத்த பாதிப்பு! - தமிழகத்தில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

சென்னையில் மட்டும் இன்று 1,084 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

01 Sep 2020 5 PM

பிரணாப் முகர்ஜி உடல் தகனம்!

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி அவருக்கு வயது 84. மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டெல்லியில் வசித்து வந்தார். இந்த நிலையில் தலையில் ஏற்பட்ட காயத்துக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

`ஒரே நாளில் 5,928 பேருக்கு தொற்று; 4,33,969 -ஆக அதிகரித்த மொத்த பாதிப்பு! - தமிழகத்தில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

தலை காயத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இன்று மாலை அவரது உடல், அரசின் கொரோனா வழிகாட்டுதலில் படி, மின் மயானத்தில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!

01 Sep 2020 4 PM

செப்டம்பர் 14 -ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

செப்டம்பர் 14 -ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த, சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து ஏற்பாடுகலூம் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்து எம்.எல்.ஏ -க்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

01 Sep 2020 11 AM

செப்டம்பர் 9-ல் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

`தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்’ என்று அக்கட்சி அறிவித்துள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தேர்வு தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `பொதுக்குழுவுக்கு முன்னதாக தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 3-ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும்’ என்றும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

`பிரிக்கப்படும் மாவட்டங்கள் பின்னணியில் பிரசாந்த் கிஷோர்' - தி.மு.க-வில் நடக்கும் உள்கட்சி அரசியல்!
01 Sep 2020 9 AM

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்... கோயில்கள் திறப்பு!

கோயில் திறப்பு
கோயில் திறப்பு
உ.பாண்டி

`தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் பேருந்துகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இயங்கலாம்’ எனத் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் பேருந்து சேவை தொடங்கியது. அதேபோல், தமிழகம் முழுவதும் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டு, பொதுமக்கள் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

`பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
01 Sep 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,91,167-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 69,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona
Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 819 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65,288-ஆக அதிகரித்திருக்கிறது.

``தீபாவளிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்!" மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
அடுத்த கட்டுரைக்கு