Published:Updated:

உ.பி பாலியல் வன்கொடுமை: `என்னை போலீஸார் தரையில் தள்ளினர்...!’ - ஹத்ராஸ் செல்லும் வழியில் ராகுல் கைது #NowAtVikatan

01-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Oct 2020 3 PM

தடுத்து நிறுத்திய போலீஸ்; கீழே விழுந்த ராகுல்! 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு கடுமையாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம் பெண், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

தடுத்து நிறுத்திய போலீஸ்
தடுத்து நிறுத்திய போலீஸ்

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியும் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காரில் புறப்பட்டனர். அப்போது, போலீஸார் , ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், உள்ளே அனுமதிக்க முடியாது என யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து இருவரும் நடந்து சென்றனர். பிரியங்கா காந்தி, 3 நாள்கள் ஆனாலும் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பேன் என்றார்.

தடுத்து நிறுத்திய போலீஸ்
தடுத்து நிறுத்திய போலீஸ்

தொடர்ந்து முன்னேறி சென்ற ராகுல் காந்தி போலீஸாரால், தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, ராகுல் காந்தி கீழே விழுந்தார். மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு குறித்தும் நோய் கட்டுப்பாட்டு சட்டமும் தடைக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி, ``போலீஸார் என்னை தள்ளிவிட்டனர். லத்தியால் என்னை தாக்கி, தரையில் தள்ளினர். இந்த நாட்டில் மோடி ஜி மட்டும் தான் நடந்து செய்ய முடியுமா?ஒரு சாமானியனால் நடக்க முடியாதா? எங்களின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டால்தான் நடந்து செல்கிறோம்” என்றார் ஆவேசமாக.

இதனிடையே விதிகளை மீறியதாக போலீஸார் ராகுல் காந்திய கைது செய்வதாக தெரிவித்தனர். அதற்கு ராகுல், ``ஹத்ராஸுக்கு நான் தனியே செல்கிறேன். எந்த பிரிவின் கீழ் என்னை நீங்கள் கைது செய்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு போலீஸார், ``உங்களை செக்‌ஷன் 188 ஐபிசியின் படி, உத்தரவுகளை மீறிய பிரிவில் கைது செய்கிறோம்” என்றனர்.

01 Oct 2020 2 PM

கண்டனம் நியாயம்தான்; கட்டுப்பட்டு இருக்கணும்!

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், `எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர்’ என நேற்று பேட்டி அளித்திருந்தார். அதற்கு அ.தி.மு.க-வில் பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தநிலையில் அது குறித்து ஒட்டன்சத்திரம் அருகே பெத்தேல்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், ``கண்டனம் நியாயமானது. கட்சிக் கட்டுப்பாடு கரெக்டுதான். நான் மூத்த உறுப்பினர். கட்டுப்பட்டு இருக்கணும். அதனால், இன்னைக்கு வாய் திறப்பதாக இல்லை'' என்று தெரிவித்தார்.

- ஆர்.குமரேசன்

`தனித்தனி ஆலோசனையில் தவறில்லையே..?’ - பற்றவைத்த சீனிவாசன்; விளக்கமளித்த ஜெயக்குமார்
01 Oct 2020 10 AM

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

தமிழகத்தில் `ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைக்கிறார்.

ரேஷன் கடை முன் பெண்கள்
ரேஷன் கடை முன் பெண்கள்
உ.பாண்டி

தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 32 மாவட்டங்களில் இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் இதைத் தொடங்கிவைக்கிறார்.

கரூர்: `கிடைத்தது ரேஷன் கார்டு... வாழ்நாளுக்கும் மறக்க மாட்டேன்!' - நெகிழும் மாரியப்பன்
01 Oct 2020 10 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 63,12,584-ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,179 மரணங்கள் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 98,708-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 52,73,201பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு