Published:Updated:

`கே.பி.முனுசாமியின் கருத்து அ.தி.மு.க கருத்து அல்ல!’ - அமைச்சர் ஜெயக்குமார் #NowAtVikatan

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

02-02-2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

02 Feb 2021 10 AM

`கே.பி.முனுசாமியின் கருத்து அ.தி.மு.க-வின் கருத்தல்ல!’

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடவிருக்கும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், ``7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார். மன்னிப்புக் கோரினால் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து பரீசிலிப்போம் என கே.பி முனுசாமி தெரிவித்த கருத்து, அ.தி.மு.க-வின் கருத்து கிடையாது” என்றார்.

02 Feb 2021 9 AM

ஆண்டின் முதல் கூட்டத்தொடர்!

2021-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கவிருக்கிறது. கொரோனா சூழல் காரணமாக, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க, இந்த முறையும் சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆங்கில உரையை சபாநாயகர் தனபால் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கலைவாணர் அரங்கம் - சட்டசபை
கலைவாணர் அரங்கம் - சட்டசபை

ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் நிறைவு பெறும். அதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால், ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு