Published:Updated:

நிர்பயா குற்றவாளிகள் தூக்குதண்டனை நிறைவேற்றுவது நிறுத்திவைப்பு! #NowAtVikatan

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

2-3-2020 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

02 Mar 2020 5 PM

தூக்குதண்டனை நிறைவேற்றுவது நிறுத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்காவது குற்றவாளியின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தநிலையில், அவர்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

02 Mar 2020 2 PM

இந்தியாவில் இருவருக்கு கொரோனா!

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும் துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

02 Mar 2020 1 PM

மீண்டும் கருணை மனு!

நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக குற்றவாளி பவன்குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், குற்றவாளிகளில் இருவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டப்படி நாளை (மார்ச் 3) நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார். நால்வருக்கும் ஒரே நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கருணை மனு காரணமாக நாளை தண்டனை நிறைவேற்றுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு