Published:Updated:

`தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா; சென்னையில் 174..’ - சுகாதாரத்துறை #NowAtVikatan

கொரோனா
கொரோனா

02-05-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

02 May 2020 7 AM

கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு #Corona!

சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குத் திரும்பிய 20 தொழிலாளர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கடலூர் திரும்பிய 7 பேருக்குத் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோயம்பேடு -  சென்னை
கோயம்பேடு - சென்னை

கோயம்பேடு சந்தையிலிருந்து அரியலூர் மாவட்டத்துக்குத் திரும்பிய 19 பேருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கடலூரில் தொற்று உறுதி செய்யப்பட்ட 7 தொழிலாளர்களும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

கோடை... கொரோனா தந்த கொடை!
02 May 2020 9 AM

ஆரஞ்சு மண்டலமான கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை அடுத்த நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு சோதனை நடத்தப்பட இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலத்தில் இருந்த ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரியும் தற்போது ஆரஞ்சு மண்டலமாகியுள்ளது.

02 May 2020 12 PM

அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம்!

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மின் கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு 5,000 உதவித்தொகை வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை. மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. கொரோனா சமூகப் பரவலாக மாறிவிடாமல் இருப்பது மக்களின் கடமை. வீட்டிலேயே முடங்கி இருக்கும் உழைப்பாளி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது. இந்த ஊரடங்கால் சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

02 May 2020 2 PM

மத்திய அரசின் தளர்வுகளைப் பின்பற்ற முடிவு!

தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது. அங்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என முதல்வர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு, மஞ்சள், மற்றும் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய அரசு அளித்த தளர்வுகள் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 May 2020 4 PM

மே 17 வரை ஊரடங்கு!

தமிழக அமைச்சரவை  கூட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது. ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும். சிறு குறு தொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

02 May 2020 7 PM

தமிழகத்தில் கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு