Published:Updated:

மூன்றாவது நாளாக 1,000-த்தைத் தாண்டிய பாதிப்பு!- 24,586 ஆக உயர்ந்த எண்ணிக்கை #Corona #NowAtVikatan

corona
corona

2-6-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

02 Jun 2020 7 PM

மூன்றாவது நாளாக 1,000-த்தைத் தாண்டிய பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.

corona
corona

சென்னையில் மேலும் 809 பேருக்குக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த எண்ணிக்கை 16,585 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

02 Jun 2020 1 PM

திறக்கப்படும் திருப்பதி கோயில்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக வரும் 8-ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள் ஆகியோர் மட்டும் தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், 6 அடி இடைவெளியுடன் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

02 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா! - அப்டேட்ஸ்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706 -ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 95,527 -ஆக உள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,598 ஆக உள்ளது.

02 Jun 2020 8 AM

முதல்வர் இன்று ஆலோசனை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்புப் பணிகள்குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை செய்ய உள்ளார். சென்னையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

02 Jun 2020 8 AM

கொரோனா அப்டேட்ஸ்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,66,193ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,03,605ஆக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,437 பேர் ஆகும்.

உலக அளவில் அதிக பாதிப்புகளைச் சந்தித்துவரும் அமெரிக்காவில், கொரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 18,59,323 -ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,06,925 -ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு