Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் முதல்முறையாக 4,000-த்தைக் கடந்த பாதிப்பு - 4,343 பேருக்கு பாசிட்டிவ்!

கொரோனா கார்ட்டூன்
கொரோனா கார்ட்டூன் ( ஓவியம்: கார்த்திகேயன் மேடி )

2.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

02 Jul 2020 6 PM

தமிழகத்தில் முதல்முறையாக 4,000-த்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர்: பெண் ஊழியருக்கு கொரோனா; அதிகாரிகள் அலட்சியத்தால் பதறும் அறநிலையத்துறை

சென்னையில் மேலும் 2,027 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,598ஆக அதிகரித்துள்ளது. 38,947 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 22,686 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளது.

02 Jul 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,85,493-லிருந்து 6,04,641 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,400-லிருந்து 17,834 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,59,860 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,26,947 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

02 Jul 2020 9 AM

கொரோனா அப்டேட்ஸ்: 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,93,417ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 59,30,148 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,18,046 ஆக உள்ளது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

உலக அளவில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துவரும் அமெரிக்காவில், கொரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 27,78,500 ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,789 ஆகவும் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு