Published:Updated:

சாத்தான்குளம் விவகாரம்: கைது செய்யப்பட்ட போலீஸார் 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்! #NowAtVikatan

ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன்
ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன்

2.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Jul 2020 9 PM

கைது செய்யப்பட்ட போலீஸார் 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன்
ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் சுமார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர். அதன்பின்னர், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் மூவரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

சாத்தான்குளம்: ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பு!  -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிக்கிய பின்னணி
02 Jul 2020 6 PM

சிறுமி கொலை நெஞ்சைப் பதறச் செய்கிறது!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

புதுக்கோட்டை சிறுமி கொலை தொடர்பாக ட்வீட் செய்துள்ள முதல்வர் பழனிசாமி, ``அறந்தாங்கியில் 7 வயதுச் சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது நெஞ்சைப் பதறச் செய்கிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்துக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ட்வீட்
ட்வீட்
புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை, கொலை! -7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
02 Jul 2020 3 PM

பெண் காவலர் வீட்டுக்கு பாதுகாப்பு..!

சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும், ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, காவலர் ரேவதியுடன் நீதிபதிகள் செல்போனில் பேசினர். நீதிபதிகள் உத்தரவை அடுத்து அரிவான்மொழியில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டு வாயிலில் இரு காவலர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

02 Jul 2020 11 AM

உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்திவருகிறது. இன்று காலையில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் மிக முக்கியமானது.

இந்த நிலையில் காவலர் ரேவதியைத் தொடர்புகொண்டு நாங்கள் பேச இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவருக்கு உரிய பாதுகாப்பும் விடுப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களை ஒரே இரவில் கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் பாராட்டைத் தெரிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு