Election bannerElection banner
Published:Updated:

டெல்லி விவசாயிகள் போராட்டம்: உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை! #NowAtVikatan

மோடி
மோடி

03-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Feb 2021 4 PM

வேளாண் சட்டங்கள்: பிரதமர் மோடி தீவிர ஆலோசனை! 

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
நன்றி டிடி

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தில் இருந்து பின்வாங்குவோம் என விவசாயிகள் உறுதியாக இருக்க, தற்போது பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயத் துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

03 Feb 2021 10 AM

`7-ம்தேதி தமிழகம் வருகிறார் சசிகலா’

நான்காண்டுகள் சிறைத் தண்டனை முடிவுற்று விடுதலையாகியிருக்கும் சசிகலா, பெங்களூரு அருகேயுள்ள ஹெப்பல் நகரில் தங்கியிருக்கிறார். கொரோனா தொற்று இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் சசிகலா, விரைவில் தமிழகம் வருவார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுவது, கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

தினகரன்
தினகரன்

இந்தநிலையில், இன்று மதுரையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட டி.டி.வி.தினகரன், ``சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் திரும்புவார்” என்ற தகவலை வெளியிட்டார். மேலும், ``உண்மையின் பக்கம் இருப்பபர்கள், விசுவாசத்தின் பக்கம் இருப்பவர்கள், சசிகலாவை ஆதரிக்கின்றனர்’’ என்றும் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு