Published:Updated:

தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்கிறது! #NowAtVikatan

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

3-5-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

03 May 2020 9 PM

பெட்ரோல் விலை உயர்கிறது!

தமிழகத்தில் பெட்ரோல்-டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது.

03 May 2020 9 PM

மே 17 ம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு தொடரும்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைப்பெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “மே 17 ம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு தொடரும். மக்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டும். நாளை முதல் அரசு அலுவலகங்கள் திறக்கப்படும். விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தில் இருந்து யாரும் வர அனுமதி கிடையாது. கடைகள் திறந்தால் புதுச்சேரிக்குள் வர கூடாது. வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை” என்றார்.

03 May 2020 7 PM

ஒரே நாளில் சென்னையில் 200-ஐக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 203 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

`ஊர் திரும்பிய கோயம்பேடு தொழிலாளர்கள்' - கொரோனா தொற்று அதிகரிப்பால் கலங்கும் விழுப்புரம், கடலூர்
03 May 2020 4 PM

கொரோனா சிகிச்சை வார்டுகளுக்காக திருமண மண்டபங்கள்!

கொரோனா
கொரோனா

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகளை அமைக்க 15 மண்டலங்களில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. கொரோனா வார்டுகளுக்காக ஏற்கெனவே பள்ளிகளை மாநகராட்சி கேட்டிருந்த நிலையில், தற்போது திருமண மண்டப உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

சென்னையில் கொரோனா வார்டுகள் முழுமையாக நிரம்பியதாக நேற்று தகவல் வெளியான நிலையில், மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

03 May 2020 11 AM

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ராணுவம் மரியாதை!

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ராணுவம் மரியாதை.! கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு...

Posted by Vikatan EMagazine on Saturday, May 2, 2020

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொரோனா சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

03 May 2020 11 AM

தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா!

தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறை குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

03 May 2020 11 AM

40,000-ஐ நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 39,980 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,633 ஆகவும் அதிகரித்துள்ளது.

03 May 2020 11 AM

கொரோனா எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்பு?!

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் மாதம் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கான நாள்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு