Published:Updated:

தமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு - 25,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை! #NowAtVikatan

corona
corona

3.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Jun 2020 7 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்திருக்கிறது.

corona
corona

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,012 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 17,598 ஆக இருக்கிறது. அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 610 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா... முதல்வர் சொல்வது உண்மைதானா?
03 Jun 2020 6 PM

தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிப்பு!

தலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அவர், வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெறும் நிலையில், 3 மாதங்கள் பதவிக்காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் நீடிப்பார்.

`ஆலோசகர் அரசியல்'... தலைமைச் செயலாளர் சண்முகம் மூட்டிய தீ... பழைய பகையைத் தீர்த்ததா தி.மு.க?
03 Jun 2020 4 PM

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு!

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்
மாதிரிப் படம்

10, 11, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதேநேரம், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

03 Jun 2020 12 PM

தேர்வை தள்ளிவைக்க முடியாது..!

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், `தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

03 Jun 2020 12 PM

பள்ளிகள் திறப்பு எப்போது?

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் நிலைமைகளைப் பொறுத்து முடிவுகளை எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ``பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

03 Jun 2020 10 AM

2 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706 -ல் இருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,527 - ல் இருந்து 1,00,303 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 1,01,497 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598 -ல் இருந்து 5,815 ஆக உயர்ந்துள்ளது.

03 Jun 2020 9 AM

உலகளவில் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை 64,47,901 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30,23,638 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 30,41,851 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மீதம் உள்ள 3,82,412 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக 18,81,205 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 1,08,059 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு