Published:Updated:

Corona Live Updates: `தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்குத் தொற்று!’ - 2 லட்சத்தைக் கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

Corona
Corona ( Unsplash )

3.8.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Aug 2020 6 PM

புதிதாக 5,609 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,021 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,021 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,985 ஆக அதிகரித்துள்ளது.

03 Aug 2020 10 AM

இந்தியாவில் 18 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona
Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 771 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,135ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,86,203 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா:`வெளியே வந்து சாப்பிடுறாங்க; டீ குடிச்சுட்டு போறாங்க!' - நோயாளிகளால் பதறும் திருச்சி
03 Aug 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்!

Corona
Corona
Unsplash

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,33,977 உயர்ந்துள்ளது. 6,92,785 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48,13,647 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், 1,58,365 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொரோனா: `ஆளுநருடனான சந்திப்பு; நோ அறிகுறி!’ - கர்நாடக முதல்வருக்கு வைரஸ் பாசிட்டிவ்
அடுத்த கட்டுரைக்கு