Published:Updated:

ஒரே நாளில் 5,892 பேருக்குத் தொற்று; சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் பதிவான பாதிப்பு! - தமிழகத்தில் கொரோனா #NowAtVikatan

கொரோனா
கொரோனா ( Pixabay )

03-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

03 Sep 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,851-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 -ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 7,608 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 968 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 1,38,724 ஆக உள்ளது.

03 Sep 2020 11 AM

லடாக்கில் ராணுவத் தளபதி நரவானே!

இந்தியா-சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. சீனப் படைகள் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டிய நிலையில், கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவத் தளபதி நரவானே லடாக்கின் லே பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

லடாக்
லடாக்

களத்திலிருக்கும் அதிகாரிகள், அவரிடம் எல்லைப் பகுதியில் இருக்கும் பதற்றம் குறித்து விவரிக்க இருக்கிறார்கள். லடாக்கில் தளபதி நரவானே இரண்டு நாள்கள் வரை தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது!

03 Sep 2020 10 AM

இ.எம்.ஐ காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் வங்கிகளின் முடிவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணையைத் தொடர்கிறது. இந்த வழக்கில், இ.எம்.ஐ கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள்கூட நீட்டிக்க முடியும் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கித் தரப்பிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இ.எம்.ஐ செலுத்துவதில் சிக்கலா? - இதோ சில யோசனைகள்!
03 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,53,406-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 83,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,043 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67,376-ஆக அதிகரித்திருக்கிறது. ஒரே நாளில் 68,584 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில்,குணமடைந்தோர் எண்ணிக்கை 29.01 லட்சத்திலிருந்து 29.70 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

சென்னை: 21.5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்பு திறன்... செரோ ஸ்டடி முடிவுகள்!
03 Sep 2020 10 AM

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்காக தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தநிலையில், தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சிவழியாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.

`தம்பியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன்!' - வேட்புமனுவைத் தயார் செய்த துரைமுருகன்
அடுத்த கட்டுரைக்கு