Published:Updated:

`தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருகிறது!’ - அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

03-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

03 Nov 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருகிறது!

வளர்ந்த நாடுகளே கொரோனா அலையிலிருந்து மீண்டுவர முடியாத நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகக் குறைந்துவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கொரோனா பரிசோதனை முடிவுகளை வேகமாக அளிக்கும் வகையில் முன்னேறியிருக்கிறோம். ஒரு கோடி ஆர்.டி.பி.சிஆர் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தி முன்னோடியாக இருக்கிறோ.ம். தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது. இதுவரை 4.3 லட்சம் காய்ச்சல் முகாம்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. தொற்று பரவ பண்டிகைக் காலம் காரணமாக இருக்கலாம் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

சென்னை: கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் என்ன?
03 Nov 2020 11 AM

உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

பேரறிவாளன்
பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளனின் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். `சட்டப்படியான முடிவுகளை ஆளுநர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என உச்ச நீதிமன்ற நிதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

03 Nov 2020 11 AM

11-ம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரணை! - சி.பி.ஐ

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

`சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும்’ என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ தெரிவித்திருக்கிறது.

03 Nov 2020 9 AM

தேர்தல்... இடைத்தேர்தல்!

இந்தியாவில் கொரோனா பரவலுக்குப் பிறகு முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று காலை முதல் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்றுவருகிறது. 17 மாவட்டங்களிலுள்ள 94 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொகுதிகளில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

கர்நாடகா இடைத்தேர்தல்
கர்நாடகா இடைத்தேர்தல்

பீகார் சட்டசபைத் தேர்தல் தவிர்த்து, நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தலும் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கும் , குஜராத்தில் எட்டு தொகுதிகளுக்கும் , உத்தரப்பிரதேசத்தில் ஏழு தொகுதிகளுக்கும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 54 சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு