Published:Updated:

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி - தமிழக டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகார்! #NowAtVikatan

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி
சசிகலா காரில் அ.தி.மு.க கொடி

04-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

04 Feb 2021 5 PM

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி - தமிழக டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகார்!

சிறையிலிருந்து வெளியான சசிகலாவின் காரில் அ.தி.மு.க கொடி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அக்கட்சி சார்பில் தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா
சசிகலா

கொரோனா தொற்று பாதிப்பால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் பயணித்த காரில் அ.தி.மு.க கொடி பயன்படுத்தப்பட்டது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.கவினர் கூறிவந்தனர். இந்தநிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு, இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் வர இருக்கும் நிலையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா: `கெமிக்கல் ரியாக்‌ஷன்’, `சஸ்பென்ஸ்’, `பொறுத்திருந்து பாருங்கள்’ - தினகரன் அதிரடி
04 Feb 2021 1 PM

ஆளுநரிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை!!

பேரறிவாளன் உட்பட 7 பேர்
பேரறிவாளன் உட்பட 7 பேர்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம்மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் இது குறித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவர்,``ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்” என்றார். பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

04 Feb 2021 12 PM

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை! - மசோதா தாக்கல்

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். தடையை மீறி ஆன்லைனில் சூதாடினால், 5,000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம சிறைத் தண்டனையும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

04 Feb 2021 12 PM

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு!

 பேரறிவாளன்
பேரறிவாளன்

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது கடந்த 21-ம் தேதிக்குள்ஆளுநர் முடிவெடுக்க அறிவுறித்தியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், விசாரணைப் பட்டியலில் வழக்கு இடம்பெற்றிருக்கிறது.

04 Feb 2021 10 AM

காசிப்பூர் எல்லையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள்!

டெல்லியின் எல்லைகளில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் 70 நாள்களுக்கு மேலாக போராடிவருகிறார்கள். அவர்கள் டெல்லிக்குள் நுழைந்துவிடாத வண்ணம், சாலைகளை முள்கம்பிகள்கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சை ஆனது. நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பினர்.

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி - தமிழக டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகார்! #NowAtVikatan

இந்தநிலையில், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளை சந்தித்துப் பேசச் சென்றனர். தமிழக எம்.பி-க்களும் கலந்துகொண்டனர். ஆனால், போலீஸார் எம்.பி-க்களைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையே டெல்லியின் சாலைகளில் ஆணிகள்கொண்டு வைக்கப்பட்டிருந்த தடுப்பு தற்போது நீக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு