Published:Updated:

Corona Live Updates: `சென்னை 1,842; பிறமாவட்டங்கள் 2,438’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம்

கொரோனா
கொரோனா

4.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

04 Jul 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,001-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,450-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

சென்னையில் மேலும் 1,842 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,842 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,531 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000 -ஐ கடந்துள்ளது.

வெளிமாவட்டங்களில் இன்று 2,438 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளது.

04 Jul 2020 5 PM

சென்னையில் சில தளர்வுகள்!

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமானதைத் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். அதில், ``சென்னையில் வரும் ஜூலை 6-ம் தேதி முதல் தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் வழங்கலாம். சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் வழங்கலாம்.

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு

காய்கறிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். வணிக வளாகங்கள் தவிர அனைத்து விதமான ஷோரூம்கள், ஜவுளிக்கடைகள் , நகைக்கடைகள் ஆகியன காலை 10 மணி முதல் 6 மணி வரை இயங்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளார். மதுரையில் நாளையுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில், வரும் 12-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர்.

04 Jul 2020 4 PM

மதுரையில் ஊரடங்கு நீட்டிப்பு!

மதுரையில் வரும் திங்கள் முதல் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூலை 6 -ம் தேதி முதல் ஜூலை 12 -ம் தேதி வரை முழுமுடக்கம் நீட்டிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் முழுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்த முழுமுடக்க காலத்தில் தற்போது அமலில் உள்ள அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை தொடரும் என்றும் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையானவற்றை மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

04 Jul 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா
கொரோனா
Pixabay

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,544-லிருந்து 6,48,315 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,213-லிருந்து 18,655 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,35,433 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு