Published:Updated:

புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளுக்கு அனுமதி! - உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

05-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Jan 2021 11 AM

தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உலக புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழாவிற்கு முதன் முறையாக பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. வரும் 28-ம் தேதி நடைபெறும் தைப்பூச பெருவிழா அன்று பொது விடுமுறை எனவும், இனி வரும் காலங்களிலும் இது தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

05 Jan 2021 11 AM

மணிமுக்தா ஆற்றில் விஷ்ணு சிலை

புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளுக்கு அனுமதி! - உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே சித்தலூர் மணிமுக்தா ஆற்றில் நேற்று மாலை இரண்டு மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்த போது சுமார் 1 அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன விஷ்ணு சிலை கிடைத்தது. இந்த சிலையை மாணவர்கள் அருகில் உள்ள சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

-ஜெ. முருகன்

05 Jan 2021 10 AM

புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளுக்கு அனுமதி!

மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டது. ஆனால், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. மேலும், ``கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு பாரம்பர்யப் பாதுகாப்புக்குழுவின் ஒப்புதல் தேவை. குழுவின் ஒப்புதல் பெற திட்ட ஆதரவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்துகிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

05 Jan 2021 9 AM

புதிய நாடாளுமன்றக் கட்டடம் - இன்று தீர்ப்பு!

மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டது. ஆனால், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை கட்டுமானப் பணிகளையோ, கட்டடம் இடிக்கும் மற்ற பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது. ஆனால், ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமறம் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

 உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

05 Jan 2021 8 AM

தமிழகத்தில் மழை!

சென்னை மழை - மெரினா கடற்கரை - மாதிரிப் படம்
சென்னை மழை - மெரினா கடற்கரை - மாதிரிப் படம்
ராகேஷ் பெ

வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதலே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இன்று இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு