Published:Updated:

`விளக்கேற்றிய மோடி; மெழுகுவத்தி ரஜினி!’ - விளக்கொளியில் மிளிர்ந்த இந்தியா #NowAtVikatan

மோடி
மோடி

5.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Apr 2020 9 PM

விளக்கேற்றிய மோடி, ரஜினி!

05 Apr 2020 9 PM

`9 மணி...9 நிமிடங்கள்!’

படங்கள் - வி.ஸ்ரீனிவாசுலு

05 Apr 2020 9 PM

விளக்கேற்றிய மக்கள்!

05 Apr 2020 9 PM

`9 மணி...9 நிமிடங்கள்!’

9 மணி.....9 நிமிடங்கள்!; விளக்குகளை ஒளிரச் செய்த மக்கள்! கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீடுகளில்...

Posted by Vikatan EMagazine on Sunday, April 5, 2020
விளக்கு
விளக்கு

கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீடுகளில் விளக்குகளை அணைத்து மக்கள் செல்போன் டார்ச், அகல் விளக்கு உள்ளிட்டவைகளை ஒளிரச் செய்து காட்டினர்.

9 மணி.....9 நிமிடங்கள்!; விளக்குகளை ஒளிரச் செய்த மக்கள்! கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விளக்குகளை...

Posted by Vikatan EMagazine on Sunday, April 5, 2020
05 Apr 2020 6 PM

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485-ல் இருந்து 571 ஆக அதிகரித்திருக்கிறது.

தொற்று பாதித்த 571 பேரில் 522 பேர் ஒரே மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று கூறி சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், இதுவரை 8 பேர் பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

05 Apr 2020 5 PM

நாகர்கோவில், வாடிப்பட்டியில் கனமழை!

05 Apr 2020 8 AM

கொரோனா உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு!

நேற்று வரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 75 வயது முதியவர் கடந்த 2-ம் தேதி உயிரிழந்தார். அவரின் கொரோனா ரிசல்ட் இன்று தெரியவந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்தது என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 60 வயது ஆண் நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு