Published:Updated:

`தமிழகத்தில் 1,438; சென்னையில் மட்டும் 1,116 பேருக்குத் தொற்று’- #Corona நிலவரம் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

5.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

05 Jun 2020 6 PM

தமிழகத்தில் 1,438; சென்னையில் மட்டும் 1,116 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவல் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

Corona
Corona

சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் 18,693-இலிருந்து

19,809 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்தது. அதேபோல், ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 861 பேர் மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை 15,762 பேர் குணமடைந்துள்ளனர்.

`ஐரோப்பிய நாடுகளில் குறையும் பாதிப்பு; இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில்..?’ -உலகளவில் கொரோனா அப்டேட்ஸ்
05 Jun 2020 6 PM

`ஐ லவ் கோவை!’

ஐ லவ் கோவை கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. உக்கடம் பெரியகுளத்தில் , பெரிய வடிவிலான 'I...

Posted by Vikatan EMagazine on Friday, June 5, 2020
05 Jun 2020 9 AM

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு!

கொரோனா - இந்தியா
கொரோனா - இந்தியா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பால் 273 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்மூலம் நாட்டில் கொரோனா காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 6,348 ஆக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107-லிருந்து 1,09,462 ஆக அதிகரித்துள்ளது.

05 Jun 2020 7 AM

ஜார்க்கண்ட், கர்நாடகாவில் நிலநடுக்கம்!

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் இன்று காலை 6.55 மணிக்கு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய சீஸ்மோலஜி மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 6.55 மணிக்கு கர்நாடகாவின் ஹம்பிப் பகுதியில் 4.0 ரிட்கர் என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காலையில் ஒரே நேரத்தில் நாட்டின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு