Published:Updated:

தமிழகத்தில் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து- தமிழக அரசு அறிவிப்பு! #NowAtVikatan

Tamilnadu CM MK Stalin
Tamilnadu CM MK Stalin

05-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

05 Jun 2021 8 PM

தமிழகத்தில் 12 -ம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொது தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படாது என அறிவித்துள்ளது. தமிழகத்தில் ப்ளஸ் 2 பொது தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படாது என அறிவித்துள்ளது. 12 - ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வியிலும் பாது காப்பிலும் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. 18 வயதுக்குக் குறைவான தடுப்பூசி போடாத மாணவர்களைத் தேர்வு எழுத வரச்செய்வது தொற்றை அதிகரிக்கும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு
தமிழக அரசு
தமிழக அரசு
தமிழக அரசு
தமிழக அரசு

மதிப்பெண் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் போன்ற நுழைவுத் தேர்வை நடத்துவது உகந்ததாக இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

download
05 Jun 2021 2 PM

12 -ம் வகுப்பு தேர்வை நடத்த பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு..?

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வு அறிக்கையை இன்று மாலை முதல்வரிடம் அளிக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இறுதி முடிவை எடுப்பார் எனத் தெரிகிறது.

05 Jun 2021 12 PM

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய குழு!

நீட் தேர்வு
நீட் தேர்வு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு ஏற்படுத்திய பாதிப்பு குறித்து அறிக்கை தர முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கென நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ``சமூக நீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை அகற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்” என முதல்வர் தெரிவித்துள்ளார். `சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டார்களா என்றும் இந்த குழு ஆய்வு செய்யும் எனவும், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை சரி செய்வது குறித்தும் இந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்யும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

05 Jun 2021 9 AM

வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் `ப்ளூ டிக்’ நீக்கம்!

தமிழகத்தில் 12 -ம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் ரத்து- தமிழக அரசு அறிவிப்பு! #NowAtVikatan

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் `ப்ளூ டிக்’ நீக்கம். அதிகாரப்பூர்வ கணக்கை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்!

05 Jun 2021 9 AM

சென்னையில் எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு!

தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். எனினும் இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்ளாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டம் அதிக கவனம் பெற்றது.

ஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ!’ - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

நேற்றைய கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ``அவர் இன்று(நேற்று) புது வீடு கிரகப்பிரவேசம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் வேறொன்றும் இல்லை. அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடைபெறவில்லை” என்றார். மேலும் தனக்கும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு என்பதில் உண்மையில்லை என்றார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, இன்று ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு