Published:Updated:

Corona Live Updates: `4,150 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!’ - தமிழகத்தில் 1.11 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

corona spread
corona spread

5.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Jul 2020 6 PM

தமிழகத்தில் 1.11 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதைiயடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது.

மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 62,778 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 60 கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.

Fight against corona
Fight against corona

சென்னையில் மேலும் 1,713 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,713 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. 24,890 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இன்று ஒரே நாளில் 1,000 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.

05 Jul 2020 11 AM

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு

கொரோனாத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகளின்றி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின. பெட்ரோல் பங்குகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பால், காய்கறி மற்றும் மருத்துவம் தொடர்பான சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இடம்: தஞ்சாவூர், மருந்துவக்கல்லூரி சாலையிலிருந்து ரயிலடி வரை. வீடியோ: ம.அரவிந்த்

Posted by Vikatan EMagazine on Saturday, July 4, 2020

தமிழகத்தில் முழு ஊரடங்கு - இடம்: ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர். படங்கள்: உ.பாண்டி, ம.அரவிந்த்

தமிழகத்தில் இன்று முழு ஊரங்கு உத்தரவை அடுத்து புதுச்சேரியிலிருந்து தமிழ்க பகுதிக்கு செல்லும் வாகனங்கள் முழுவதும் திருப்பி அனுப்பபட்டது. அ.குரூஸ்தனம்

Posted by Vikatan EMagazine on Saturday, July 4, 2020
05 Jul 2020 11 AM

அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று!

கோவை தெற்குத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அம்மன் அர்ச்சுனன்
அம்மன் அர்ச்சுனன்

அவரின் குடும்பத்தினர் மதுரை சென்று திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தவாரம் அம்மன் அர்ச்சுனனின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், அவருக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 10 எம்.எல்.ஏ-க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

05 Jul 2020 10 AM

கொரோனா இந்திய நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,315-லிருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலக அளவில் தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை இந்தியா நெருங்குகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவைவிட 800 பேர் அதிகமாக ரஷ்யாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து
Pixabay

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 613 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,268 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,083 ஆகவும் உயர்ந்துள்ளது.

மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!

கொரோனா உலக நிலவரம்

கொரோனா கார்ட்டூன்
கொரோனா கார்ட்டூன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,72,004 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 64,33,942 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,32,861 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஒரே நாளில் 45,182 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை

29,35,770 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம், இதனால் பலியானோர் எண்ணிக்கையும் 1,32,318 ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் 254 பேர் உயிரிழந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு