Published:Updated:

சென்னையில் செப்டம்பர் 7 முதல் புறநகர் ரயில் சேவையா?' - ரயில்வே விளக்கம் #NowAtVikatan

புறநகர் மின்சார ரயில்
புறநகர் மின்சார ரயில்

05-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

05 Sep 2020 6 PM

அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்படவில்லை!

சென்னையில் புறநகர் ரயில்களை செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்குவது பற்றி அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்படவில்லை என ரயில்வே விளக்கமளித்துள்ளது.

புறநகர் ரயில்
புறநகர் ரயில்

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரம், சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னையில் வரும் 7-ம் தேதி முதல் புறநகர் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அதுதொடர்பாக அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்படவில்லை என ரயில்வே விளக்கமளித்துள்ளது.

KisanRail:`தமிழகத்தில் எப்போது விவசாயி ரயில் சேவை?’ - வலுக்கும் கோரிக்கை
05 Sep 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 -ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 தொற்று
கோவிட்-19 தொற்று

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 7,748-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 5,859 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 965 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா: `பரவலான தடுப்பூசி விநியோகத்தை அடுத்த ஆண்டு பாதி வரை எதிர்பார்க்க முடியாது!' - WHO
05 Sep 2020 3 PM

மருத்துவக் குழுவினருடன் முதல்வர் 8-ம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துக்குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாநிலம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில் போக்குவரத்து தொடங்கவிருக்கின்றன. இந்தநிலையில், மருத்துவக் குழுவினருடனான ஆலோசனையின்போது கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

05 Sep 2020 10 AM

அமைச்சர்களுக்குக் கட்டளையிடும் அதிகாரம் ஹெச்.ராஜாவுக்குக் கிடையாது!

`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் பிளவு ஏற்படுத்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் பேசுகிறார்களா?’ என்று கேள்வி எழுப்பியிருந்த ஹெச்.ராஜா, `பா.ஜ.க-வை இழிவாகப் பேசுவதும், பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான்’ என்று சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

செல்லூர் ராஜூ - ஜெயக்குமார்
செல்லூர் ராஜூ - ஜெயக்குமார்

இந்தக் கருத்துக்கு பதில் தெரிவித்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், ``அமைச்சர்களுக்குக் கட்டளையிடும் அதிகாரம் ஹெச்.ராஜாவுக்குக் கிடையாது; அவர்களைப் பேச வேண்டாம் என்று சொல்ல ஹெச்.ராஜா யார்?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

`செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல; இனி பேச வேண்டாம்!’ - ஹெச்.ராஜா
05 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40,23,179-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 86,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,089 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68,472-ஆக அதிகரித்திருக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை 31.07 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

கொரோனா: `பரவலான தடுப்பூசி விநியோகத்தை அடுத்த ஆண்டு பாதி வரை எதிர்பார்க்க முடியாது!' - WHO
அடுத்த கட்டுரைக்கு