Published:Updated:

'நீக்கி விடுவார்கள் என்று விலகிக் கொண்டார்': ராஜினாமா செய்தவர்களுக்கு கமல் பதில் #NowAtVikatan

கமல்
கமல்

06-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 May 2021 9 PM
'நீக்கி விடுவார்கள் என்று விலகிக் கொண்டார்': ராஜினாமா செய்தவர்களுக்கு கமல்  பதில் #NowAtVikatan
'நீக்கி விடுவார்கள் என்று விலகிக் கொண்டார்': ராஜினாமா செய்தவர்களுக்கு கமல்  பதில் #NowAtVikatan
06 May 2021 7 PM

ம.நீ.ம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் விலகியுள்ள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது அக்கட்சி. திராவிட கட்சிகளுக்கு மாற்று என களமிறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3 வது இடத்தைக்கூட பிடிக்கமுடியவில்லை. எனவே கட்சியை மறு கட்டமைப்பு செய்ய விருப்பதாக தகவல்கள் வெளியாகின.

'நீக்கி விடுவார்கள் என்று விலகிக் கொண்டார்': ராஜினாமா செய்தவர்களுக்கு கமல்  பதில் #NowAtVikatan

இதைத் தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். துணைத்தலைவர் மகேந்திரன், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார் . மேலும் பொன்ராஜ், பொது செயலாளர்கள் சந்தோஷ் பாபு , சி.கே குமரவேல், மவுரியா, முருகானந்தம் உள்ளிட்டோரும் தாங்கள் வகித்த பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

'நீக்கி விடுவார்கள் என்று விலகிக் கொண்டார்': ராஜினாமா செய்தவர்களுக்கு கமல்  பதில் #NowAtVikatan
PremKumar SK

இதற்கிடையில் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களை கமல் ஹாசன் பரிசீலணை செய்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது .

06 May 2021 5 PM

கடும் அவதியில் வேலூர் மக்கள்

அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால், வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகியிருக்கிறது. சுளீரென்று தோலைக் கிழிக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரையிலும் 95 டிகிரியிலிருந்து 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டி வதைப்பதால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைகிறார்கள். ஜூஸ், தர்பூசணி, இளநீர் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட நீராகாரங்களைப் பருகி உடலை ஓரளவு திடப்படுத்திக்கொள்கிறார்கள்.

சுட்டெரிக்கும் வெயிலில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டிச் செல்லும் தொழிலாளி
சுட்டெரிக்கும் வெயிலில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டிச் செல்லும் தொழிலாளி

வேலூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 28 -ம் தேதி நிலவரப்படி 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. 29-ம் தேதி 102.2 டிகிரி ஃபாரன்ஹீட், 30-ம் தேதி 98.2 டிகிரி ஃபாரன்ஹீட், இந்த மாதம் 1-ம் தேதி 99 டிகிரி ஃபாரன்ஹீட், 2-ம் தேதி 98 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

3-ம் தேதி உச்சக்கட்டமாக 100.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. 4-ம் தேதியும் அதே வெப்பநிலை நிலவியது. 5-ம் தேதியான நேற்று வெயிலின் தாக்கம் 99.9 சதவிகிதமாகவும், இன்று திடீரென 102 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் கொளுத்துகிறது. வெயில் சுட்டெரித்தாலும் கடந்த காலங்களைப் போல் வறண்ட காற்று வீசவில்லை என்பதால் வேலூர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்கிறார்கள்.

- லோகேஷ்வரன்

06 May 2021 11 AM

`எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!’

அழகிரி
அழகிரி

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ``எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்” என குறிப்பிட்டிருக்கிறார்.

06 May 2021 9 AM

இந்தியாவில் 4 லட்சத்தைக் கடந்த ஒருநாள் பாதிப்பு..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,10,77,410 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா - ஆக்ஸிஜன்
கொரோனா - ஆக்ஸிஜன்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,980. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,30,168-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,72,80,844-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 35,66,398 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,29,113 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 16,25,13,339 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

06 May 2021 9 AM

கொரோனா பாதிப்பு - முன்னாள் மத்திய அமைச்சர் உயிரிழப்பு!

சௌத்ரி அஜித் சிங்
சௌத்ரி அஜித் சிங்

ராஷ்டிரிய லோக் தள (ஆர்.எல்.டி) கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான செளத்ரி அஜித் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 82. கடந்த மாதம் 20 -ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் மகனான சௌத்ரி அஜித் சிங், ஏழு முறை எம்.பி-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

06 May 2021 8 AM

ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம் கோரிக்கை!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடே காரணமாகச் சொல்லப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்தநிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ``செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது போன்ற துயரச் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தில் கேட்டுக்கொள்கிறேன்” என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

06 May 2021 8 AM

அமலுக்கு வந்தன புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் இன்று காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி, அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க வேண்டும். பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும். வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்குக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகளுக்கு அனுமதி இல்லை.

மளிகைப் பொருள்
மளிகைப் பொருள்

இவை தவிர, தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்கத் தடைவிதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல எந்தத் தடையுமின்றி செயல்படும். உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி இல்லை!

`மே 6 முதல் மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி!’ - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு  #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு