Published:Updated:

இதுவரை இல்லாத புதிய உச்சம்! - தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

6.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

06 Jun 2020 6 PM

30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸூக்கு இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 0.83 % ஆக உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395 ஆக உயர்ந்துள்ளது.

06 Jun 2020 5 PM

பேச்சுவார்த்தை நிறைவு!

இந்திய, சீன எல்லைப் பகுதியாக லடாக்கில் கடந்த சில வாரங்களாக அதிகளவில் பதற்றம் நிலவி வருகிறது. சீன அரசு எல்லைப் பகுதியில் தொடர்ந்து படைகளை அதிகளவில் குவித்து வந்தது. இதனால், இந்தியாவும் அப்பகுதியில் ராணுவ வீரர்களை அதிகப்படுத்தியது. இருநாட்டு ராணுவ வீரர்களும் ஆயுதங்கள் இன்றி கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பதற்றம் அதிகமாகிக்கொண்டு இருந்த நிலையில் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவர இரண்டு நாடுகளின் அரசாங்கமும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்தது. இதையடுத்து, இன்று காலை சுஷூல்-மோல்டோ பகுதியில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இந்திய - சீன எல்லை
இந்திய - சீன எல்லை

இந்தியாவின் சார்பில் கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் என்பவர் பங்கேற்றார். சீனாவின் சார்பில் அந்நாட்டு படை தளபதிகளில் ஒருவரான லியுலின் என்பவர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் லடாக் எல்லைப் பகுதியில் தங்கியுள்ள வீரர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சீனாவும் வீரர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

06 Jun 2020 11 AM

கொரோனா கட்டணம் நிர்ணயம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை நிர்ணயித்து அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி லேசான அறிகுறிகளுடன் பொது வார்டில் அனுமதிக்கப்படுபவர்களிடம் நாள் ஒன்றுக்கு ரூ. 5,000 முதல் ரூ.7,500 வரை வசூலிக்க வேண்டும். அதேபோல் ஐ.சியூவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.15,000 வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை
அறிக்கை
06 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,26,770 -லிருந்து 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே நாளில் 9,887 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348 -லிருந்து 6,642 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே நாளில் 294. இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பும் மரணங்களும் பதிவாகியுள்ளன.

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,073 ஆக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி, தற்போது இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு 80,000 -ஐ கடந்துவிட்டது!

அடுத்த கட்டுரைக்கு