Published:Updated:

சிங்கங்களுக்கு கொரோனா - வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு | #NowAtVikatan

வண்டலூரில் ஸ்டாலின்
வண்டலூரில் ஸ்டாலின்

06.06.2021 அண்மைச் செய்திகள்

06 Jun 2021 6 PM

போலீஸை   மிரட்டிய   பெண்   மீது   வழக்கு

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறை போலீஸாரை மிரட்டிய பெண் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி காரில் வந்தது குறித்து போலீஸார் விசாரித்தபோது, தன்னை ஒரு வழக்கறிஞர் என்று கூறிய அந்த பெண், கொன்றுவிடுவதாகவும், யூனிஃபார்மை கழற்றை வைத்துவிடுவேன் என்றும் போலீஸாரை மிரட்டியிருக்கிறார். இந்த காட்சிகளை வீடியோவாக போலீஸார் பதிவு செய்தனர். வீடியோவில் போலீஸார் தனது மகளிடம் ஒருமையில் பேசியதாக சண்டைபோடுகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து ஊரடங்கு விதிகளை மீறியது, கொலை மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சிங்கங்களுக்கு கொரோனா - வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு | #NowAtVikatan
06 Jun 2021 5 PM

வண்டலூரில்   முதலமைச்சர்   ஆய்வு!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 9 வயது பெண் சிங்கம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதர் சிங்கங்களுக்கு தகுந்த மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், இதர விலங்குகளை கொரோனாவிலிருந்து காக்க எடுக்கப்பட்ட நவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

சிங்கங்களுக்கு கொரோனா - வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு | #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு