Published:Updated:

Corona Live Updates: `தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்குத் தொற்று!’ - சுகாதாரத்துறை

கோவிட் 19
கோவிட் 19

6.8.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 Aug 2020 7 PM

தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,141 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,21,087 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4,571 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாகத் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

கொரோனா
கொரோனா

சென்னையில் மேலும் 1,091 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,091 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,096 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

06 Aug 2020 4 PM

`கொரோனா பாதிப்பு குறைகிறது’

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மதுரையில் இன்று ஆய்வு நடத்திய முதல்வர் பழனிசாமி, ``தமிழக அரசின் தொடர் தடுப்பு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மதுரையில் படிப்படியாகக் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதியும் உள்ளது” என்றார்.

இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் பேசுகையில், விரைவில் மதுரையில் எய்ம்ஸ் கட்டடப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு