Published:Updated:

`இ-பாஸ் வழங்க கூடுதலாக ஒரு குழு அமைப்பு!’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

6.8.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 Aug 2020 7 PM

இ-பாஸ் வழங்க கூடுதலாக ஒரு குழு!

இன்று மதுரையில் பேசிய முதல்வர் பழனிசாமி, ``பொதுமக்கள் தேவையின்றி வெளியூர் செல்லக்கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையில் இருக்கிறது. இ-பாஸ் வழங்குவதில் முறைகேடுக்கு இடம் இருக்கக்கூடாது என்பதற்காகவே கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வழங்குவது எளிமையாக்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன” என்றார்.

06 Aug 2020 6 PM

இந்தியன் 2 படப்பிடிப்பு தளம் விபத்து: ரூ. 4 கோடி நிதியுதவி

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ 4 கோடி நிதியுதவியை நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர் வழங்கினர். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, இயக்குநர் ஷங்கர், ``உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம்” என்றார்.

`இ-பாஸ் வழங்க கூடுதலாக ஒரு குழு அமைப்பு!’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ``படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம். இனி சட்டதிட்டங்களின்படி நடப்போம்” என்றார்.

06 Aug 2020 6 PM

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடபெற்ற நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடிவுகள் வர ஆரம்பித்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு எதிர்பார்த்ததைப் போல ராஜ பக்சேவின் கட்சி 72 சதவிகித வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறது. தமிழர் பகுதிகளில் மும்முனைப் போட்டிகள் நிலவி வந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னணியில் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு