Published:Updated:

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி #Corona #NowAtVikatan

அடிகர் அஜித்
அடிகர் அஜித்

7.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Apr 2020 1 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421; பலி 114!

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது. 114 பேர் பலியாகியுள்ளனர். 326 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 748, தமிழ்நாட்டில் 621, டெல்லியில் 523, கேரளாவில் 327, ராஜஸ்தானில் 325, தெலங்கானாவில் 321, உபியில் 305 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

07 Apr 2020 1 PM

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!

வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத் தடுக்க புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது வாட்ஸ்அப். பல்வேறு குழுக்களில் அதிகம் முறை பகிரப்படும் தகவல்களுக்கு மட்டுமே புதிய கட்டுப்பாடு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

07 Apr 2020 2 PM

பிராணிகளை தேடிச்சென்று உணவளிக்கும் கோவை இளைஞர்கள் !!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஆதரவற்ற...

Posted by Vikatan EMagazine on Monday, April 6, 2020

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஆதரவற்ற மக்களை தேடிச்சென்று உணவளித்து வருகின்றனர். கோவையில் இளைஞர்கள் ராகுல், கரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தினமும் தங்கள் வீட்டில் உணவு சமைத்து, நகரில் பல்வேறு பகுதியில் உணவுக்காக ஏங்கும் பிராணிகளை தேடிச்சென்று உணவளிக்கின்றனர்.

07 Apr 2020 5 PM

நடிகர் அஜித் நிதியுதவி!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு மட்டும் அல்லாமல் மக்களும் இறங்கிச் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் என ஒரு கோடி ரூபாய் நிதி அளித்திருக்கிறார். மத்திய, மாநில நிராவண நிதிக்கு உதவித்தொகை வழங்கிய நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லாததால் பெரும் இன்னலைச் சந்தித்துவரும் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கும் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு