Published:Updated:

'கூச்சல்; குழப்பம்;அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!'#NowAtVikatan

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

07-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 May 2021 9 PM

அதிமுக எம்.எல்.ஏ -க்கள் கூட்டம் ஒத்திவைப்பு

இன்று எப்படியும் யார் எதிர் கட்சித் தலைவர் என்ற முடிவு எட்டப்பட்டுவிடும் என்றே அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களுக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ -க்கள் கூட்டத்திலும் பேச்சு வார்த்தையில் சுமூக நிலை இல்லாததால் எதிர் கட்சித் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. முடிவு எதுவும் எட்டப்படாததால் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

07 May 2021 6 PM

ஓ.பி.எஸ்  - இ.பி.எஸ் மற்றும்  எம்.எல.ஏக்கள் வருகை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று முடிவு செய்யும் கூட்டம் தொடங்கியது.

முன்னதாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாள எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தலைமை அலுவலகம் வந்தனர். அப்போது கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆதரவாளர்ளிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

'கூச்சல்; குழப்பம்;அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!'#NowAtVikatan
'கூச்சல்; குழப்பம்;அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!'#NowAtVikatan
'கூச்சல்; குழப்பம்;அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!'#NowAtVikatan
07 May 2021 8 AM

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் யார்?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க 65 இடங்களை மட்டுமே கைப்பற்றித் தோல்வியைத் தழுவியது. திமுக தலைவர் ஸ்டாலின் 7-ம் தேதி (இன்று) முதல்வராக அரியணை ஏறுகிறார். இதனிடையே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்கவிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடிப்பதில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கட்சியின் கொறடாவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு