Published:Updated:

`குறைந்து வரும் கொரோனா பரவல்..’ - மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி! #NowAtVikatan

மோடி
மோடி

07-06-2021 | இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு...!

07 Jun 2021 1 PM

நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

மோடி
மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடன் உரையாற்ற இருக்கிறார். நாட்டு மக்களிடம் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக் கூறி மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்த உள்ளதாக தகவல்.

07 Jun 2021 10 AM

``வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு”

சென்னை சாலிகிராமத்தில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடங்களில் அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், `சென்னை சாலிகிராமம், காந்தி நகரில் தனியார் வாகனங்கள் கட்டுமானக் கழிவுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 5.5 ஏக்கர் நிலம் தமிழக அரசால் இன்று மீட்கப்பட்டு இருக்கிறது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.

சேகர்பாபு
சேகர்பாபு

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது இந்து சமய அறநிலையத்துறை ஒரு போதும் அனுமதிக்காது. மீட்கப்பட்ட இடத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் படியான திட்டம் அங்கு செயல்படுத்தப்படும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்து சமய அறநிலையத் துறைக்கு வரவேண்டிய வருமானங்களை யார் மடைமாற்றம் செய்து இருந்தாலும், அதனை நிச்சயம் மீட்டெடுப்போம். அனைத்தையும் சட்டப்படியே செய்வோம்” என்றார்.

திமுக-வின் 30 நாள் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, ``இத்யு வெறும் ட்ரெய்லர் தான்.. இனி மெயின் பிக்சரை பார்ப்பீர்கள்” என்றார்.

07 Jun 2021 9 AM

முடங்கியது இ-பதிவு இணையதளம்!

`குறைந்து வரும் கொரோனா பரவல்..’ - மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி! #NowAtVikatan

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்ஸிகளில் பயணிப்போர், மின்சாரம் தொடர்பான பணிகள், பிளம்பிங், கணினி பழுதுபார்ப்பவர்கள் உள்ளிட்ட சுயதொழில் செய்வோருக்கு இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இன்று காலை முதல் இ-பதிவு செய்ய முயன்றனர். அதிகபடியான நபர்கள் இ-பதிவு செய்ய முயன்றதால், இ-பதிவு இணையதளம் முடங்கியது!

07 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,00,636 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,89,09,975 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,427. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,49,186-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,71,59,180-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 14,01,609 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,74,399 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 23,27,86,482 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

07 Jun 2021 8 AM

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகளுடனான ஊரடங்கு...!

ஊரடங்கு
ஊரடங்கு

தமிழகத்தில் இன்று காலையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து தற்போது தளர்வுகளுடன் கூட ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. தொற்று பரவல் குறையாத கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகளுடன்னும் மீத உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. எனினும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு முறை தொடர்கிறது. தளர்வுகளுடனான் ஊரடங்கு காரணமா சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தளர்வுகளுடனான ஊரடங்கு குறித்த முழு தகவல், கீழே உள்ள லிங்கில்...

தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
அடுத்த கட்டுரைக்கு