Published:Updated:

Corona Live Updates: பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

7.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Jul 2020 9 PM

அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு கொரோனா!

உலகளவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்த நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசில் அதிபரின் அலட்சியமான நடவடிக்கைகளே அந்நாட்டில் வைரஸ் பரவுவதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதலே ஊரடங்குக்கு எதிராகவும் கொரோனாவை `சிறிய காய்ச்சல்’ என்றும் அழைத்து வந்தார். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசங்கள் அணியாமல், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்து வந்தார்.

அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

இந்த நிலையில், தற்போது அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அவர் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் பரிசோதனைகளை செய்துள்ளார். ஆனால், அப்போது அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றே முடிவுகள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

07 Jul 2020 7 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்:

தமிழகத்தில், இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 71,116 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 65 ஆகக் கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1, 636 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

சென்னையில் மேலும் 1,203 பேருக்கு தொற்று!

சென்னையில் மட்டும், இன்று 1,203 பேருக்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக 2,000-க்கும் குறைவாக பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது.

தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நெல்லையில் 181, தூத்துக்குடி 144, கன்னியாகுமரி 119, தென்காசி 62, விருதுநகர் 253 ஆக பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

07 Jul 2020 4 PM

திருப்பதி கோயிலில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு!

 திருமலை-திருப்பதி
திருமலை-திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. காவலர்கள் 30 பேர் உள்பட மொத்தம் 44 பேருக்குப் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அர்ச்சகர் உள்ளிட்ட 17 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

07 Jul 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்!

corona Virus
corona Virus

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,39,169 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 66,41,866 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,40,833 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம், இதனால் பலியானோர் எண்ணிக்கையும் 1,32,979 ஆக உயர்ந்துள்ளது.

07 Jul 2020 10 AM
கொரோனா: `ஓராண்டுக்கு முகக்கவசம் அவசியம்’ -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,665 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona virus
Corona virus

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,160 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,432 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு