Published:Updated:

ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி! - ராஜ்நாத் சிங் வாழ்த்து #NowAtVikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை
ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை

07-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

07 Sep 2020 7 PM

இந்தி: உதவி ஆணையர் புகார்!

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு நிகழ்வதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் என்பவர் கடிதம் எழுதி உள்ளார்.

ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி! - ராஜ்நாத் சிங் வாழ்த்து #NowAtVikatan

தனது புகாரில், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை எனவும் இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், அவர்களுக்கும் இந்தி தெரியாது, அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

07 Sep 2020 3 PM

ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி!

ஒடிசாவில் உள்ள கலாம் தீவில் நடைபெற்ற ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

07 Sep 2020 12 PM

கேசவானந்த பாரதி மறைவு! - தலைவர்கள் இரங்கல்

கேரளாவைச் சேர்ந்த மடாதிபதி கேசவானந்த பாரதி மறைவுக்கு பாரத பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயிடு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சமுதாய சேவைக்காகவும், நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் கேசவானந்த பாரதி ஜி அவர்களின் பங்களிப்புகளை நாம் எப்போதும் நினைவில்கொள்வோம். அவர் இந்தியாவின் வளமான கலாசாரம் மற்றும் அரசியலமைப்புடன் ஆழமாக தொடர்பிஉல் இருந்தார். அவர் அடுத்த தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பார். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார்.

கேசவானந்த பாரதி
கேசவானந்த பாரதி

திமுக தலைவர் ஸ்டாலின், ``இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை விழுமியங்களைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் வழக்கினைத் தொடுத்தவரான கேசவானந்த பாரதி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி துயரத்தை அளிக்கிறது.

ஆட்சியாளர்கள் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மையினைக் கொண்டு, அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்குக் கடிவாளம் போட்ட அந்த வழக்கின் தீர்ப்பு; இன்றுவரை 'கேசவானந்த பாரதி' வழக்கு என்றே வரலாற்றில் புகழ்ப் பெயர் பெற்று நிலைத்துள்ளது.

1973-ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்புதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான; மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் இவற்றைப் பாதுகாப்பதற்கான வாளும் கேடயமுமாக விளங்குகிறது” என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

07 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா - அப்டேட்ஸ்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,04,614-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கோவிட்-19
கோவிட்-19

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71,642-ஆக அதிகரித்திருக்கிறது. ஒரே நாளில் 1,016 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,50,429-ஆக உயர்ந்திருக்கிறது.

07 Sep 2020 9 AM

மீண்டும் தொடங்கிய பேருந்து, ரயில் சேவைகள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தில், கடந்த சில மாதங்களாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்ரன.

அந்தவகையில், பொதுமுடக்கத்தால் மாவட்டங்களுக்கிடையில் நிறுத்திவைக்கப்படடிருந்த பேருந்துப் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்துக்குள் ரயில் சேவையும் இன்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறதுது. சென்னையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜூன் மாதத்துக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் உடல் வெப்ப சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு