Published:Updated:

`தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம்!' - மத்திய அரசு அனுமதி #NowAtVikatan

தேனி மருத்துவக் கல்லூரி
தேனி மருத்துவக் கல்லூரி

8.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Mar 2020 9 PM

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம்!

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி

கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39ஆக உயர்ந்திருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் இரண்டாவது கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கெனவே சென்னை கிங் ஆய்வகம் இருக்கும் நிலையில், புதிதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

08 Mar 2020 12 PM

`ஹர்பஜன் சிங்' கோபம்!

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சில மணிநேரங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதில், ``நேற்று நான் மும்பையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது கொண்டுவந்த எனது கிட் பேக்கில் இருந்து ஒரு பேட் காணவில்லை என்பதை அறிந்தேன். இந்த குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவரின் உடமைகளுக்குச் சென்று எந்தவொரு பொருளையும் எடுத்துக்கொள்வது பெயர் திருட்டு" என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் டுவீட்டுக்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், உடனே இதுதொடர்பாக செக் செய்து ரிப்ளை செய்வதாக அறிவித்துள்ளது

08 Mar 2020 11 AM

கேரளாவில் மீண்டும் கொரோனா..!

கேரளாவில் ஏற்கெனவே மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் அறிவித்துள்ளார். இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேர் உட்பட பத்தினம் திட்டாவைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

08 Mar 2020 10 AM

தன் சமூக வலைதளங்களைப் பெண்களிடம் ஒப்படைத்தார் பிரதமர்!

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்தியப் பிரதமர் மோடி, பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தன் சமூகவலைதளக் கணக்குகளை 7 சாதனையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்! சில நாள்களுக்கு முன்பு நான் சொன்னதுபோல், நான் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறேன். இன்றைய நாள் முழுவதும், ஏழு பெண் சாதனையாளர்கள் எனது சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தங்கள் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்துகொண்டு உங்களுடன் உரையாடுவார்கள்.

இந்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சிறந்த பெண்கள் சாதனையாளர்களைக் கொண்டுள்ளன. இந்தப் பெண்கள் பல துறைகளில் சிறந்த பணிகளைச் செய்துள்ளனர். அவர்களின் போராட்டங்களும் அபிலாஷைகளும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன. அத்தகைய பெண்களின் சாதனைகளைக் கொண்டாடி, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு