Published:Updated:

கொரோனா பரிசோதனையை கட்டணமில்லாமல் செய்யவேண்டும் - உச்சநீதிமன்றம் #Corona அப்டேட் #NowAtVikatan

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

8.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Apr 2020 10 AM

அமெரிக்காவில் 12 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்பு!

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 12 ஆயிரத்தைத் தாண்டியது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,813 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 1,942 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,00,323 ஆக உள்ளது.

அதேபோல், உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 82 ஆயிரத்தைத் தாண்டி 82,005 ஆக உள்ளது. மேலும் 209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ‘உலகளவில் கொரோனாவிலிருந்து 3,01,828 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

08 Apr 2020 6 PM

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

08 Apr 2020 7 PM

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இலவச பரிசோதனை தொடர்பான அரசாணையை வெளியிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு