Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பிரதமர்... இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்து தடை! #NowAtVikatan

2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பிரதமர்
2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பிரதமர்

08-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Apr 2021 9 AM

இந்தியப் பயணிகளுக்கு தடை!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவிலிருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு அந்த நாடு தற்காலிகத் தடை விதித்துள்ளது. வரும் ஏப்ரல் 11 முதல் 28-ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்திருக்கிறார்.

08 Apr 2021 9 AM

2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பிரதமர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தினசரி பாதிப்பும் தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் பெற்றுள்ளன.

பிரதமர்
பிரதமர்

இந்தநிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் மருந்தை எடுத்துக்கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். பின்னர் ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனாவை வெற்றிகொள்ளும் வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. அதனால் தகுதியான நபர்கள், உடனடியாக தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் மோடி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு