Published:Updated:

கொரோனா: இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு லட்சத்துக்கும் குறைவாகப் பதிவான தினசரி பாதிப்பு! #NowAtVikatan

கொரோனா முடிவுகள்
கொரோனா முடிவுகள்

08-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 86,498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,89,96,473 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,123. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,51,309-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,73,41,462-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 13,03,702 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,82,282 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 23,61,98,726 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு