Published:Updated:

Corona Virus: `ஒரே நாளில் 5,883 பேருக்கு தொற்று; 118 மரணங்கள்!’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

8.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,32,618 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாகத் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

கோவிட்-19
கோவிட்-19

சென்னையில் மேலும் 986 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 984 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,095 ஆக அதிகரித்துள்ளது.

08 Aug 2020 12 PM

22 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: 

நிலச்சரிவு நடந்த இடம்
நிலச்சரிவு நடந்த இடம்

கேரளா மாநிலம் மூணாறு அருகே ராஜமலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன நபர்களைத் தேடும் பணி தீவிரமடைந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அமைச்சர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். காலை முதல் மழையில் அளவு சற்று குறைந்து காணப்படுவதால் மீட்புப் பணிகள் வேகம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

08 Aug 2020 10 AM

இந்தியாவில் 21 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,88,612 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 61,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 933 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,27,006 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2,33,87,171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 5,98,778 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

08 Aug 2020 9 AM

`சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி!’

தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்களை மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். மேலும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முன்னதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு